டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா உடன் மீட்டிங்.. மறுநாளே கன்ஹையா குமார் மீது வழக்கு.. கெஜ்ரிவால் அடித்த யூ-டர்ன்.. பரபரப்பு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீப நாட்களாக பாஜகவின் கொள்கைகளுக்கு நெருக்கமாகி வருவது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீப நாட்களாக பாஜகவின் கொள்கைகளுக்கு நெருக்கமாகி வருவது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் எடுத்த மூன்று முக்கியமான நடவடிக்கைகள் அக்கட்சி தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் மாஸ் வெற்றியை பெற்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக மூன்றாவது முறையாக தேர்வானார். இவர் முழுக்க முழுக்க பாஜகவை எதிர்த்துதான் இந்த தேர்தலை சந்தித்தார்.

பாஜகவை முழுக்க முழுக்க எதிர்த்தது இவருக்கு பெரிய அளவில் உதவியது.டெல்லி தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.

ரஜினிகாந்தும் கமலும் இணைந்தால் 16 வயதினிலே போல் ஒரு படம் கிடைக்கும்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்ரஜினிகாந்தும் கமலும் இணைந்தால் 16 வயதினிலே போல் ஒரு படம் கிடைக்கும்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ஆனால் மோசம்

ஆனால் மோசம்

ஆனால் தற்போது திடீர் திருப்பமாக பாஜகவிற்கு ஆதரவாகவும், பாஜகவின் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட தொடங்கி உள்ளார். முதலாவது ஷாகீன் பாக் போராட்டம். ஷாகீன் பாக் போராட்டம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதேபோல் ஜேஎன்யூ வெளியேயும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுவரை அந்த இஸ்லாமியர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு கெஜ்ரிவால் சிறிய கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

அடுத்த சம்பவம்

அடுத்த சம்பவம்

அடுத்தபடியாக, டெல்லி சிஏஏ போராட்டத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. டெல்லி கலவரம் நடந்து முடிந்து 4 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இதற்கு இன்னும் கெஜ்ரிவால் பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை.

நிவாரணம் பணமும்

நிவாரணம் பணமும்

விபத்தில் பலியானவர்கள் , காயம் அடைந்தவர்கள் என்று யாருக்கும் கெஜ்ரிவால் இதுவரை நிதி உதவி அறிவிக்கவில்லை. 46 பேர் இறந்ததற்கோ, பலர் காயம் அடைந்ததற்கோ வருத்தம்,இரங்கல் தெரிவிக்கவில்லை . போலீஸ் ஒருவர் இறந்ததற்கு மட்டுமே இவர் நிவாரணம் வழங்கினார். அதெல்லாம் போக வெறுப்பு பேச்சு பேசிய, கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களை கெஜ்ரிவால் கண்டுகொள்ள கூட இல்லை.

கடைசி என்ன

கடைசி என்ன

இப்படி வரிசையாக பாஜகவிற்கு நெருக்கமாக அரசியல் செய்து வருபவர்தான் கெஜ்ரிவால். தற்போது இவர் முன்னாள் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் மற்றும் சிபிஐ கட்சி உறுப்பினர் கன்ஹையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிய அனுமதி அளித்துள்ளார். ஜேஎன்யூவில் 2016ல் நடந்த போராட்டத்தின் போது தேச விரோத கருத்துக்கள் பேசப்பட்டது என்று புகார் எழுந்தது. அதேபோல் அப்சல் குருவிற்கு ஆதரவாக பேசியதாக கன்ஹையா குமார் மீதும் புகார் வைக்கப்பட்டது.

வழக்கு பதிந்தனர்

வழக்கு பதிந்தனர்

கடந்த வருடம் இதனால் கன்ஹையா குமார் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் டெல்லி அரசுதான் இந்த தேச துரோக வழக்கை பதிய அனுமதி அளிக்க வேண்டும். இத்தனை நாட்கள் கெஜ்ரிவால் இந்த அனுமதியை போலீசுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் தற்போது திடீர் என்று டெல்லி போலீஸ் கன்ஹையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிய, கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

English summary
Delhii CM Arvind Kejriwal meets Amit shah and filed a case against Kanhaiya Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X