ஒரு தாயாக வலிக்கிறது.. மணிப்பூர் வன்முறையால் மனம்நொந்த சோனியா காந்தி.. வீடியோவில் உருக்கம்!
டெல்லி: மணிப்பூர் வன்முறைக்கு பாஜகவினரை பல கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் சோனியா காந்தி அப்படி எதுவும் கூறாமல் 2.59 நிமிட வீடியோவில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். வீடியோவில் அவர் மணிப்பூர் மக்களிடம் ‛ஒரு தாயாக உங்களின் வலியை உணர முடிகிறது' என கூறியிருப்பதோடு, முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டி அமைதியாக இருக்கும்படி கோரிக்கை வைத்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். நிலப்பரப்பில் மிகவும் சிறிய மாநிலமாக உள்ள மணிப்பூரில் பழங்குடியின மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இதன்மூலம் மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 50 நாட்களாக மணிப்பூரில் வன்முறை நடந்து வருகிறது. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களுக்கு இடையேயான மோதல் வன்முறையாக மாறி தொடர்ந்து வருகிறது.
குக்கி இனக்குழுவினரைப் போல தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி பிரிவு மக்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பி தான் இரு இனக்குழுவினரும் மோதி வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மத்திய இணையமைச்சர், மாநில அமைச்சர் உள்பட அரசியல்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு வருகிறது.

வன்முறையை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறைக்கு பாஜக தான் காரணம் என காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் மணிப்பூர் வன்முறை பற்றி பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார் எனவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க வன்முறையில் பாதிக்கப்பட்ட 47,000 பேர், 372 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், வன்முறை குறைந்தபாடாக இல்லை. இதனால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழ தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை தொடர்பாக சோனியா காந்தி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறைக்கு பாஜகவினர் தான் என பல தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் சோனியா காந்தி அதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. மாறாக மணிப்பூர் வன்முறை தன்னை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கி இருப்பதாகவும், ஒரு தாயாக வலியை புரிந்து கொள்ள முடிகிறது எனக்கூறிய சோனியா மக்களை அமைதி காக்கும்படி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சோனியா காந்தி பேசும் 2.59 நிமிட வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னெப்போதும் இல்லாத வன்முறையால் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை சீரழிந்துள்ளது. இந்த வன்முறை ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வீடுகளை இழந்து வெளியேற்றப்படுவதை கண்டு நான் வருத்தப்படுகிறேன்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேற்கொள்ள நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒற்றுமையாக இருக்க வேண்டிய சகோதர, சகோதரிகள் மாறிமாறி தாக்கி கொள்வது இதயத்துக்கு வலிக்கிறது. பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கை தான் நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்ல விஷயமாக இருக்கும். ஒரு தாயாக உங்களின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் அழகான மணிப்பூர் நிலத்தில் நமது குழந்தைகளுக்கு அமைதியான நல்ல எதிர்காலம் அமைத்து கொடுக்க வேண்டியது அவசியம். இதனை மணிப்பூர் மக்கள் செய்வார்கள் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது. நாம் ஒன்றாக இணைந்து இந்த சோதனையை சமாளிப்போம். அமைதியாக இருங்கள்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications