Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை மீண்டும் சீண்டிய வங்கதேசம்.. வெங்காயத்தை வைத்து ஆட்டம் போடும் முகமது யூனுஸ்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு தொடர்ந்து மோசமாகி வருகிறது. இருநாடுகளும் விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளன. இதன் அடுத்தக்கட்டமாக நம் நாட்டை வங்கதேசம் சீண்டி உள்ளது. அதன்படி நம் நாட்டின் ஹிலி வழியாக வங்கதேசத்துக்கு வெங்காயம் கொண்டு செல்வதற்கான அனுமதியை வங்கதேசம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்துக்கள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். இதனை மத்திய அரசு கண்டித்துள்ளதோடு, இந்துக்களின் படுகொலையை தடுக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசுக்கு கோரிக்கை வைத்ள்ளது.

ஆனால் வங்கதேச இடைக்கால அரசு தொடர்ந்து கண்டுக்கொள்ளாமல் உள்ளது. இதனால் வங்கதேசத்தில் உள்ள விசா வழங்கும் மையங்களை நம் நாடு மூடியுள்ளது. இதனால் வங்கதசத்தினர் இந்தியா வருவதற்கான விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு வங்கதேசமும் இந்தியர்கள் அந்த நாட்டுக்கு செல்வதற்கான விசா நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளனர்.

இப்படி இருநாடுகள் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக மீண்டும் நம் நாட்டை வங்கதேசம் சீண்டி உள்ளது. நம் நாட்டில் இருந்து வங்கதேசத்துக்கு அரிசி, மாத்திரை, மருந்துகள், காய்கறிகள், வெங்காயம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் வெங்காய ஏற்றுமதிக்கு வங்கதேசம் திடீர் தடை விதித்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் எல்லையான ஹிலி வழியாக வெங்காயம் கொண்டு செல்வதற்கான அனுமதியை அந்த நாடு நிறுத்தி உள்ளது. தற்போது வங்கதேசத்தில் வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டில் நம் நாடு மொத்தம் 17.17 லட்சம் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்தது. இதில் 7.24 லட்சம் டன் வங்கதேசத்துக்கு தான் சென்றது. ஆனால் 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் வங்கதேசத்துக்கான வெங்காய ஏற்றுமதியை நம் நாடு குறைத்தது. இந்த காலக்கட்டத்தில் நம் நாட்டில் இருந்து 12,900 டன் வெங்காயம் மட்டுமே வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திடீரென்று அடிக்கடி வெங்காயம் விலை உயர்வதால் வெளிநாடுகளில் இருந்து நம் நாடு வெங்காயம் இறக்குமதி செய்யும் நிலை வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் நம் நாடு பிற நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதியை குறைத்தது. குறிப்பாக வங்கதேசத்துக்கான ஏற்றுமதியை பெரிய அளவில் குறைத்தது.

செப்டம்பர் 2019 முதல் ஆறு மாதங்களுக்கும், செப்டம்பர் 2020 முதல் ஐந்து மாதங்களுக்கும் ஏற்றுமதி தடைபட்டது. அதன்பிறகு ஆகஸ்ட் 2023 முதல் ஏப்ரல் 2025 வரை நம் நாடு வெங்காய ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இது நம் நாட்டின் வெங்காயத்தை நம்பியிருக்கும் நாடுகளிடம் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. வங்கதேசமும் பாதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த வங்கதேசம் தற்போது நம் நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதிக்கான அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இது சிக்கலாகவே பார்க்கப்படுகிறது.

இதுபற்றி மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛நம் நாட்டின் வெங்காயத்தின் தரம் நன்றாக உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் அதிக மவுசு உள்ளது. பல நாடுகளில் நம் நாட்டு வெங்காயத்துக்கு அதிக தேவை நிலவி வருகிறது. எனவே பிற வெளிநாடுகள் நம் நாட்டின் வெங்காயத்தை அதிகம் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+