Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெட்கமே இல்லாத வங்கதேசம்.. இந்தியாவிடம் 55,000 டன் அரிசி கேட்டு கெஞ்சல்.. ரெடியாகும் பெரிய ‛ஆப்பு'?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேசத்தில் வன்முறை நடந்து வருகிறது. அங்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல் இந்துக்களை தாக்கி கொல்வதோடு, நம் நாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் இந்தியாவிடம் 55 ஆயிரம் டன் அரிசி தரும்படி வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் ஏற்றுமதியாளர்கள் அரிசி சப்ளையை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

வங்கதேசம்.. கடந்த ஆண்டு வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு வந்துவிட்டார். தற்போது முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. சிறிது காலம் அமைதியாக இருந்த வங்கதேசம் தற்போது மீண்டும் பற்றி எரிகிறது.

bangladesh-seeks-55-000-tone-rice-from-india-and-exporters-wants-to-halt-supplies

மாணவர் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. மைமன்சிங் பகுதியை சேர்ந்த இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டார். அதன்பிறகு டிசம்பர் 24ம் தேதி வங்கதேசத்தின் ராஜ்பப்ரி மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் மாண்டல் என்ற சாம்ரத் எனும் 29 வயது இந்து இளைஞரை கும்பல் அடித்து கொன்றது.

அதுமட்டுமின்றி இந்திய தூதரகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் விசா மையங்களை மத்திய அரசு மூடி உள்ளதோடு, வங்கதேசத்தினருக்கான விசா வழங்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் வன்முறையில் ஈடுபடும் பலரும் வடகிழக்கு மாநிலங்களை பிரிப்போம். இந்திய பிரிவினையை விரும்பும் சக்திகளுக்கு புகலிடம் வழங்குவோம் என்று திமிர் பேச்சு பேசி வருகின்றனர். இதனை முகமது யூனுஸ் கண்டுக்கொள்ளாமல் உள்ளது.

தற்போது வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நம் நாட்டுக்கு எதிராக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் கைக்கலியாக இருக்கும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியா - வங்கதேசம் உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படி நம் நாட்டுக்கு எதிரான வேலைகளிலும், வெறுப்பு பேச்சையும் பேசி வரும் வங்கதேசம் தற்போது நம் நாட்டிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. அதாவது நம் நாட்டிடம் இருந்து வங்கதேசம் 55,000 டன் அரிசியை வழங்கும்படி கோரி உள்ளது.

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் அங்கு தொடர் வன்முறையால் அரிசி உள்பட பல பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதோ? என்று போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர். இதனால் விலைகள் அதிகரித்துள்ளது.

இது தொடரும் பட்சத்தில் வங்கதேசம் இன்னும் பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் இடைக்கால அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் கையிருப்புக்காக வங்கதேசம் நம்மிடம் 55 ஆயிரம் டன் அரிசியை தரும்படி கேட்டுள்ளது.

மேலும் வங்கதேசத்தை எடுத்து கொண்டால் இந்தியாவை போல் பாகிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அரிசி வாங்குகிறது. ஆனால் நம் நாட்டை ஒப்பிடும்போது பாகிஸ்தான், வியட்நாமிடம் இருந்து அரிசி வாங்க அதிக பணம் செலவாகிறது.

நம் நாட்டிடம் ஒரு டன் அரிசி 355 டாலர் என்ற அளவில் கிடைக்கும்போது பாகிஸ்தானிடம் இருந்து வாங்கினால் ர 395 டாலர் வழங்க வேண்டும். இது தற்போதைய வங்கதேசத்தின் பொருளாதார சூழலுக்கு அந்த நாட்டுக்கு பெரிய தொகையாகும். இதனால் வங்கதேசம் நம் நாட்டிடம் கொஞ்ச தொடங்கி உள்ளது. இந்த வேளையில் நம் நாடு கைக்கொடுக்காவிட்டால் வங்கதேசத்தின் நிலைமை மோசமாகும்.

இந்நிலையில் தான் நம் நாட்டில் உள்ள அரிசி ஏற்றுமதியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக பேசிவிட்டு நம்மிடம் வங்கதேசம் அரிசிக்கு கையேந்தி வருகிறது. வங்கதேசத்துக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அரிசி வழங்க கூடாது. வங்கதேசத்துக்கான அரிசி சப்ளையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் நம் நாட்டில் இருந்து வங்கதேசத்துக்கு 55 ஆயிரம் டன் அரிசி செல்லுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவை பகைத்து கொண்டு வங்கதேசத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

அரிசி உள்பட பல உணவு பொருட்கள் மட்டுமின்றி ஜவுளி துறைக்கான நூல் வரை பலவற்றுக்கும் வங்கதேசம் நம்மை தான் சார்ந்துள்ளது. அதனை புரிந்து கொண்டு வங்கதேசம் இனியாவது நாவடக்கத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்தியா தனது உணவு பொருள் உள்பட பிற சப்ளையை நிறுத்த கூட வாய்ப்புள்ளது என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+