‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்தால் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கடும் கோபம் அடைந்தார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் விவகாரம் இந்தியாவில் பெரும் விவாதபொருளாகி உள்ளது. தடையை மீறி கேரளாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் நிலையில் பல பல்கலைக்கழங்களில் இந்த படங்கள் திரையிடப்பட்டு வருவது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் கேரளா ஆளுநர் ஆரிப் கான் முகமது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஏன் பிரிட்டிஷ் ஆட்சிகால அட்டூழியங்களை ஆவணப்படமாக எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பெரிய கலவரம் வெடித்தது. இதில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் தான் பிபிசி செய்தி நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 2 பகுதிகளாக ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. ‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்" என்ற தலைப்பில் முதல் பாகம் வெளியான நிலையில் 2வது பாகமும் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தடை
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தான் கடந்த 2002ல் குஜராத் முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் அவரை கலவரத்துடன் தொடர்புப்படுத்தும் வகையில் இந்த பிபிசி ஆவணப்படம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் ஆவணப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர், யூடியூப்பில் உள்ள ஆவணப்படங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் சர்ச்சை
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு காங்கிரஸ் கட்சியினர் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டனர். குறிப்பாக கேரளாவில் காங்கிரஸ் உள்ளிட்ட சில அமைப்பினர் இந்த படத்தை திரையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி .உள்பட பல பல்கலைக்கழக மாணவர்களும் பிபிசி ஆவணப்படத்தை தடையை மீறி திரையிடுவதோடு, திரையிடும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா ஆளுநர் கருத்து
இந்நிலையில் பிபிசி ஆவணப்படத்தால் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கொதித்தெழுந்துள்ளார். இதுபற்றி அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது ஆரிப் முகமது கான் கூறியதாவது: உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தற்போது சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் பிபிசி ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இவர்கள் ஏன் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை ஆவணப்படங்களாக எடுக்கவில்லை?.

நாட்டில் இருப்பவர்களை நினைத்து வருத்தம்
இந்த விஷயத்தில் நம் நாட்டில் இருக்கும் சில மக்களையும் நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஏனென்றால் நீதித்துறையின் தீர்ப்பை விட ஆவணப்படத்தின் கருத்துகளை அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இந்தியா தற்போது ஜி20 உச்சிமாநாட்டை தலைமை தாங்கி நடத்த உள்ளது. இந்த காலத்தில் இந்த ஆவணப்படம் ஏன் வெளியாகி உள்ளது?. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தனது சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இந்தியா இழந்து துண்டுதுண்டாக உடையும் என எண்ணியவர்கள் தான் தற்போது ஆவணப்படத்துக்கான நேரத்தை தேர்வு செய்துள்ளனர்'' என சாடியுள்ளார்.
-
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
டிரம்பை போலவே .. விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய பிரிட்டன்.. இந்தியாவுக்கு தான் மிக பெரிய சிக்கல் -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
இப்படி பண்ணா போதும்.. வங்கி கணக்கில் பணம் தேடி வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications