ஆசிய கோப்பையுடன் ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. கடும் கோபத்தில் இந்தியா அணி! அடுத்து என்ன
டெல்லி: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில், அந்நாட்டு அமைச்சரிடம் இருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது. இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த மொஹ்சின் நக்விக் ஆசிய கோப்பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக ஐசிசி அமைப்பிடம் முறையிட இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 69 ரன்களை எடுத்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது.

கோப்பையுடன் ஓடிய பாகிஸ்தான அமைச்சர்
இதற்கிடையே வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்விக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தது. இதையடுத்து அவர் கோப்பையுடன் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கும் ஒருவரிடம் இருந்து ஆசிய கோப்பையை ஏற்க முடியாது என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார். தேவாஜித் சைகியா மேலும் கூறுகையில், "கோப்பையைப் பொறுத்தவரை, எங்கள் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுக்கும் ஒருவரிடமிருந்து இந்திய அணியால் கோப்பையை வாங்க முடியாது. நாங்கள் கோப்பையை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால், இதற்காக அந்த நபர் கோப்பையையும் பதக்கங்களையும் தனது ஹோட்டலுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
குழந்தைத்தனம்
இது எதிர்பாராதது மற்றும் மிகவும் குழந்தைத்தனமானது. நவம்பர் முதல் வாரத்தில் துபாயில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இதற்கு நாங்கள் வலுவான கண்டனத்தைப் பதிவு செய்வோம்" என்றார். இந்த நக்வி தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆசியக் கோப்பையில் இந்தியாவின் ஆதிக்கத்தைப் பாராட்டிப் பேசிய தேவாஜித் சைகியா, "க்ரூப் போட்டியில் இந்தியா எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதன் பிறகு சூப்பர் 4 சுற்றிலும் எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றது. இந்த ஏழு போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் நடந்த நிலையில், அவை அனைத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இது ஒரு பெரிய வெற்றி மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்," என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
பாகிஸ்தானுடன் விளையாடியது ஏன்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் விளையாடியதற்கான இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாக தேவாஜித் சைகியா கூறுகையில், "இருதரப்புத் தொடர்களில், பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடாது. கடந்த 12 முதல் 15 ஆண்டுகளாகவே இதுதான் இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது.
இருப்பினும், ஆசிய கோப்பை போன்ற சர்வதேச தொடர்களில் இந்தியா விளையாடித் தான் தீர வேண்டும். இல்லை என்றால் நமது நாட்டிற்குத் தடை விதிக்கப்படலாம். இதன் காரணமாகவே சில எதிர்ப்புகள் இருந்தாலும் ஆசியக் கோப்பையில் நாங்கள் பங்கேற்றோம்" என்றார்.
இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரும்
இந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சைகியா நம்பிக்கை தெரிவித்தார். "பாகிஸ்தானுக்கு எதிரான நமது பெருவெற்றி இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் அணியின் திறன் குறித்து நாடே பெருமிதம் கொள்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications