விடுதலைப் போரில் பங்கேற்காத பாஜக நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டே சீரழிக்கிறது: சோனியா அட்டாக்
டெல்லி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக திட்டமிட்டு சீரழிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசியதாவது:
இன்று வெறுப்பரசியலை கையாளும் பாஜகவினர் சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர். அதற்கு தகுதியானவர்கள் பாஜகவினர் அல்ல.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டே சீர்குலைத்துவிட்டது பாஜக. தேசத்தைப் பிளவுபடுத்துகிற மக்களை பிரிக்கக் கூடிய இவர்களுக்கு விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லை. நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக உள்ளது .
இத்தகைய சீரழிவு சக்திகளுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்து போராடும். பெருமைக்குரிய நமது அடிப்படை நம்பிக்கைகளை சீரழிப்பதில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.
காங்கிரஸ் தலைவர்கள் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று துயரங்களை எதிர்கொண்டனர். நமது தலைவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தனர். தங்கள் வாழ்வையே நமது தலைவர்கள் இழந்தனர். தேசத்தின் ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் தொண்டர்கள் பாதுகாக்க வேண்டியது கடமை. இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு












Click it and Unblock the Notifications