டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்விக்கடன் பற்றி பேச மாட்டோம்.. நீட் குறித்து வாய் திறக்க மாட்டோம்.. கல்வியை கண்டுகொள்ளாத பாஜக!

பாஜக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் கல்வி தொடர்பான பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto 2019: இந்த 4 அம்சங்கள்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது- வீடியோ

    டெல்லி: பாஜக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் கல்வி தொடர்பான பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பாஜக கட்சி இன்று டெல்லியில் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை ஆகும் இது. பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் அறிக்கையை வெளியிட்டனர்.

    ராமர் கோவிலை கையில் எடுத்த பாஜக.. இந்துக்களின் வாக்குகளுக்கு குறி.. சிறுபான்மையினரை நழுவ விடுமா ராமர் கோவிலை கையில் எடுத்த பாஜக.. இந்துக்களின் வாக்குகளுக்கு குறி.. சிறுபான்மையினரை நழுவ விடுமா

    என்ன இருக்கிறது

    என்ன இருக்கிறது

    இந்த தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாணவர்களின் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக பாஜக அறிவிக்கவில்லை. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலவச திட்டம்

    இலவச திட்டம்

    அதேபோல் மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் எதுவும் பாஜகவால் அறிவிக்கப்படவில்லை. இலவச ரயில் பாஸ், இலவச பயிற்சி திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதுவும் கல்லூரி மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    நீட் தேர்வு

    நீட் தேர்வு

    அதேபோல் நீட் தேர்வு ரத்து குறித்தும் ஒரு வார்த்தை கூட பாஜக அறிக்கையில் இடம்பெறவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் பாஜக இந்த தேர்தல் அறிக்கையில் கல்விக்கு பெறிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. மாறாக மதம், பாதுகாப்பு தொடர்பான நிறைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

    கல்வி திட்டம்

    கல்வி திட்டம்

    அதே சமயம் கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்படும். மருத்துவ கல்லூரிகள் புதிதாக கட்டப்படும் என்று பாஜக கூறி இருக்கிறது. அதுபோல் புதிதாக கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் கட்டப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.

    English summary
    BJP forgot to put light on Education in their manifesto that has released oday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X