'இது என்ன பைத்தியக்காரத்தனம்'.. நடிகை கங்கனா ரணாவத் கருத்துக்கு பா.ஜ.க எம்.பி வருண் காந்தி கண்டனம்!
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறிய சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சிதான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 2047-ம் ஆண்டு கிடைத்தது பிச்சைதான்'' என்று சர்ச்சையாக கூறி இருந்தார் கங்கனா ரணாவத். இந்த கருத்துக்குதான் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. நடிகை கங்கனா ரணாவத் பாஜகவுக்கு ஆதரவாக தெடர்ந்து கருத்து தெரிவித்து வந்தவர் ஆவார்.

வருண் காந்தி கடும் கண்டனம்
கங்கனா ரணாவத்தின் தேவைற்ற பேச்சுக்கு பா.ஜ.க எம்.பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள வருண் காந்தி, ''சில நேரங்களில் மகாத்மா காந்தியின் தியாகத்தை அவமதிப்பது, மகாத்மா காந்தியை கொன்றவரை சில சமயங்களில் பாராட்டுவது நடந்து வருகிறது.

பைத்தியக்காரத்தனம்
இப்போது மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தியாகங்களை செய்த லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதை நான் பைத்தியக்காரத்தனம் அல்லது தேசத்துரோகம் என்று சொல்ல வேண்டுமா?" என்று பா.ஜ.க எம்.பி வருண் காந்தி கூறியுள்ளார். கடந்த மாதம் உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நீதி கோரியும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வருண் காந்தி பேசியது குறிப்பிடதக்கது.

பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும்
இந்த நிலையில் கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறியதாவது:- நமது சுதந்திர இயக்கம் மற்றும் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் அவமதிக்கப்பட்டதற்காக கங்கனா ரணாவத் அனைத்து இந்தியர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கோருகிறேன்.

மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்
மகாத்மா காந்தி, சர்தார் பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரை இழிவுபடுத்தும் இந்த பெண்ணிடம்(கங்கனா ரணாவத்) இருந்து மத்திய அரசு உயரிய பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும். அவருக்கு பத்ம விருதுகளை அரசு தருகிறது என்றால் மத்திய அரசு எந்த வகையான மக்களை ஊக்குவித்து வருகிறது? கங்கனா ரணாவத் அரசின் விருது பெற்றவர் என்பதால் அவர் சார்பாக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கவுரவ் வல்லப் கூறினார்.












Click it and Unblock the Notifications