இந்தி டூ சமஸ்கிருதம்.. யுடர்ன் அடித்த பாஜக! என்னது ஜேபி நட்டாவே சொல்லிட்டரா..! ஓ இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கடந்த சில நாட்களாக இந்தி மொழி குறித்த சர்ச்சை நாட்டில் அதிகரித்து வருவதோடு பாஜக நிர்வாகிகள் சமஸ்கிருதம் குறித்து பேசி வரும் நிலையில், சமஸ்கிருதம் நம்மை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் வழி என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

உள்ளூர் மொழிகள் அல்லாமல் ஆங்கிலம் தவிர்த்து இணைப்பு மொழியாக இந்தியை பயன்படுத்த மக்கள் முன்வரவேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதிலிருந்து, இந்தி குறித்த விவரங்கள், சர்ச்சைகள் பிரபலங்களின் மோதல் என நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருவதாக பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் முதலமைச்சர்களும் சினிமா பிரபலங்களும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

இந்தி மொழி சர்ச்சை

இந்தி மொழி சர்ச்சை

இந்தி மொழி தொடர்பான பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ஆகியோர் ட்விட்டரில் இந்தி தேசிய மொழியா என்பது குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டது தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. பல பிரபலங்கள் இந்திக்கு ஆதரவாக இருந்தாலும், சோனு நிகம் போன்ற சிலர் தமிழுக்கு ஆதரவாக நின்றனர்.

கங்கனா ரனாவத் பேச்சு

கங்கனா ரனாவத் பேச்சு

இதனை மடைமாற்றிய இந்தி நடிகை கங்கனா ரனாவத், நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை. அது சமஸ்கிருதமாக இருக்கலாம் என தான் நினைப்பதாக தெரிவித்தார். நாடு முழுவதும், தேசிய மொழி குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில் , இந்திய நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடும் என அவர் தெரிவித்தது விவாதத்தை கிளப்பியது.

சமஸ்கிருதம் மொழி

சமஸ்கிருதம் மொழி

இந்நிலையில் சமஸ்கிருதம் நம்மை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் வழி என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற உத்கர்ஷ் மகோத்சவ் நிகழ்ச்சியில் பேசிய, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா , "சமஸ்கிருதம் நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் மொழி, சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது சமூகத்தில் பல்வேறு நவீன முன்னேற்றங்களை அடைவதற்கான பாதை, சமஸ்கிருத மொழி நமது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டார்.

ஜே.பி.நட்டா பேச்சு

ஜே.பி.நட்டா பேச்சு

மேலும் சமஸ்கிருத மொழியை பயன்படுத்தும் சமூகம் ஒரு நாகரீகமான சமூகமாக இருக்கும் எனவும் , பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்திய கலாச்சாரத்தை காப்பதற்காக உழைப்பவர்களை என்றும் ஆதரிக்கும் அரசாக இருக்கும் என்று கூறிய அவர், சமஸ்கிருதத்தை காப்பதற்காகவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+