ரஷ்யாவிற்கு ஆதரவாக ட்விட்.. ஹேக் செய்யப்பட்ட பாஜக தலைவர் நாட்டாவின் ட்விட்டர்.. என்ன நடந்தது?
டெல்லி: பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் டுவிட்டர் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது. அத்துடன், ‛‛ரஷ்யா மக்களுடன் நில்லுங்கள். கிரிப்டோ கரன்சி மூலம் நன்கொடை வழங்குங்கள்'' என பதிவிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தனது ராணுவம் மூலம் உக்ரைனில் போரை துவக்கியுள்ளது. இன்று 4வது நாளாக குண்டுமழை பொழிகிறது. உக்ரைன் ராணுவத்தினரும் தங்கள் நாட்டை பாதுகாக்க ரஷ்ய படைகளுடன் போராடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் நட்பு நாடான இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் உக்ரைன் தொடர்ந்து கோரி வருகிறது. இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறினார்.

பிரதமர் பேச்சு
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுடன் பேசினார். அப்போது, ‛‛ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையுடன் இருக்கும். போரை நிறுத்துங்கள். பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம்''என கூறினார். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா பங்கேற்காமல் இருந்தது.

உக்ரைன் அதிபர் பேச்சு
இதையடுத்து நேற்று உக்ரைன் அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். அப்போது அவர், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கூறினார். மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம், உக்ரைன் அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கி கோரி்கை்கை வைத்தார்.

ட்விட்டர் முடக்கம்
இந்நிலையில் பாஜக கட்சியின் தேசிய தலைவராக ஜேபி நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை திடீரென்று முடக்கப்பட்டது. அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் தொடர்ச்சியாக பதிவுகள் செய்யப்பட்டன. ஒரு பதிவில், ‛‛உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நில்லுங்கள்... கிரிப்டோ கரன்சிகளை நன்கொடையாக வழங்குங்கள்'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. இன்னொரு பதிவில், ‛‛எனது கணக்கு முடக்கப்பட்டது. இங்கிருந்து ரஷ்யாவுக்கும் நன்கொடை வழங்கலாம்'' என கூறப்பட்டு இருந்தது.

மீட்பு
பின்னர்தான் அவரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது சர்ச்சையானது. உடனடியாக ஜேபி நட்டாவின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. அதன்பிறகு ரஷ்யா தொடர்பான ட்விட்டர் பதிவுகள் ‛டெலிட்' செய்யப்பட்டன. இதுகுறித்து ஜேபி நட்டாவின் நெருங்கிய பாஜக வட்டாரங்கள் கூறுகையில், "பாஜக தேசிய தலைவரின் கணக்கு ஹேக் செய்யப்ட்டது. தற்போது மீட்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஹேக்கிங்கிற்கான சரியான காரணம் அறிய ட்விட்டர் நிறுவனத்திடம் பேசுகிறோம்'' என்றனர்.












Click it and Unblock the Notifications