உ.பி தேர்தல்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற பாஜக போடும் பிளான்.. ஒர்க் அவுட் ஆகுமா??
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்குள்ள முஸ்லீம் வாக்காளர்களைக் கவரும் வகையில் பாஜக புதிய திட்டத்தைப் பயன்படுத்தக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அங்குத் தேர்தல் ஜுரம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
அங்கு பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும் கூட பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் உபி-இல் கடும் போட்டி நிலவுகிறது. பாஜக எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளது.

பாஜக
இருப்பினும், தற்போது அங்கு நடக்கும் நிகழ்வுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை. கடந்த சில மணி நேரங்களில் மட்டும் உபி பாஜக அமைச்சர் உட்பட 4 பேர் அக்கட்சியில் இருந்து விலகியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற பாஜக புதிய முயற்சியை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2017இல் உபி-இல் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக சார்பில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட போட்டியிடவில்லை.

இஸ்லாமியர்கள்
ஆனால் இந்த முறை குறிப்பிடத் தகுந்த அளவு இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற, உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 20 முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்குவது குறித்து தலைமை பரிசீலனை செய்ய வேண்டும் என அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பாஜக சிறுபான்மை பிரிவின் தலைவர் ஜமால் சித்திக் தி பிரின்ட் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இங்குப் பல தொகுதிகளில் கணிசமான அளவு முஸ்லீம் மக்கள்தொகை உள்ளது. அதில் கடந்த முறை பல இடங்களை நாங்கள் சிறிய வித்தியாசத்தில் இழந்தோம்.

என்ன காரணம்
உதாரணமாக, சம்பல், மொராதாபாத், மீரட் போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளது. இங்குள்ள இஸ்லாமிய வாக்குகளைப் பெற முஸ்லீம் வேட்பாளர்கள் தேவை. இது ஒன்றும் முதல்முறை இல்லை. ஏற்கனவே, மேற்கு வங்க தேர்தலிலும் கூட பாஜக சார்பில் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதே முறையை இப்போது உத்தரப் பிரதேசத்தில் பயன்படுத்துங்கள் என்று தான் நாங்கள் பரிந்துரைக்கிறோம். முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அதிகப்படுத்த வேண்டும். இது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும்.

தொகுதிகள்
உத்தரப் பிரதேசத்தில் 30 சதவீத சிறுபான்மை மக்களைக் கொண்ட 100 இடங்களையும், 20 சதவீத சிறுபான்மை வாக்குகளைக் கொண்ட 140 இடங்களையும், 60-70 சதவீத சிறுபான்மையினரைக் கொண்ட 40 இடங்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவை பெரும்பாலும் மேற்கு உத்தரப் பிரதேசம், அவத் மற்றும் பிரஜ் பகுதிகளில் உள்ளன. இங்கு பாஜக சார்பில் முஸ்லீம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டால் கட்சிக்குப் பலமாக இருக்கும்.

முஸ்லிம் வேட்பாளர்கள்
பாஜக சார்பில் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், அவர்கள் வெல்லும் வாய்ப்பு அதிகம், மே. வங்கத்தில் பாஜக வேட்பாளர்களால் வெல்ல முடியவில்லை என்றாலும் கூட நாங்கள் கடும் போட்டியைக் கொடுத்தோம். அசாம் மாநிலத்திலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். இருப்பினும், இதில் இறுதி முடிவை எடுக்க வேண்டியது தலைமை தான். நாங்கள் பிரசார வேலைகள் தொடங்கிவிட்டோம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 5,000 பேரைப் புதிதாகக் கட்சியில் இணைக்க வேண்டும் எனச் சிறுபான்மை பிரிவு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேரைக் களமிறக்கியுள்ளோம். இது தேர்தல் சமயத்தில் எங்களுக்கு புதிய உந்துசக்தியை அளிக்கும்" என்றார்.

சவால்
மேற்கு உத்தரப் பிரதேசம் ஏற்கனவே பாஜகவுக்குச் சவால் நிறைந்த பகுதிதான். இங்குள்ள பல விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றன. இதுபோக உத்தரப் பிரதேசத்தில் மொத்த மக்கள்தொகையில் 19% முஸ்லீம்கள் உள்ளனர். இந்த இரண்டும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் கடந்த 2017இல் குறைந்த வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் வெல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பாஜக ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. உபி தேர்தல் என்பது 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் போன்றது என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலைகளைத் தொடங்கியுள்ளன.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications