குங்குமத்தை மறந்த தம்பதி.. பாதியில் நிற்க போன திருமணம்.. தக்க நேரத்தில் கை கொடுத்த பிளிங்கிட்.. அடடே
டெல்லி: இந்தக் காலத்தில் இன்ஸ்டண்ட் டெலிவரி என்பது பலருக்கும் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பல்வேறு சூழல்களிலும் இன்ஸ்டண்ட் டெலிவரி பலரைக் காப்பாற்றியுள்ளது. அப்படித் தான் டெல்லியில் திருமண நிகழ்வில் முக்கியமான ஒரு விஷயத்தை மணமக்கள் வீட்டார் மறந்துவிட்டு வந்த நிலையில், இன்ஸ்டண்ட் டெலிவரி அவர்களுக்குக் கைகொடுத்துள்ளது.
ஆன்லைன் டெலிவரி இப்போது இன்ஸ்டண்ட் டெலிவரி என்ற புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. முன்பு ஆர்டர் செய்த ஒரு பொருள் நமது கைக்கு வர ஒரு சில நாட்கள் ஆகும். பிறகு அது மறுநாளாகச் சுருங்கியது. இப்போது பெருநகரங்களில் ஆர்டர் செய்தால் ஒரு சில நிமிடங்களிலேயே எந்தவொரு பொருளும் வந்துவிடுகிறது. இதைத் தான் இன்ஸ்டண்ட் டெலிவரி என்கிறார்கள்.

இன்ஸ்டண்ட் டெலிவரி
இந்த இன்ஸ்டண்ட் டெலிவரி பல்வேறு சூழல்களில் பலருக்கும் பேருதவியாக இருந்துள்ளது. அப்படியொரு சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது. அங்கு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகள் குடும்பத்தினர் குங்குமத்தை எடுத்து வர மறந்துவிட்டனர். இதனால் திருமண நிகழ்வுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் டெலிவரி செயலியான பிளிங்கிட் கை கொடுத்துள்ளது.. சில நொடிகளில் குங்குமத்தை டெலிவரி செய்து, திருமண நிகழ்வு சுமுகமாக நடக்க உதவியுள்ளது பிளிங்கிட்! இது தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
திருமண நிகழ்வு
அதாவது அங்கு வழக்கம் போலவே திருமண நிகழ்வு நடந்துள்ளது.. எல்லாமே நல்லபடியாகப் போய்க் கொண்டு இருந்தது. மெயின் திருமண நிகழ்வுகள் நடக்கும்போது தான் மணமகள் பூஜா மற்றும் மணமகன் ஹ்ரிஷி ஆகியோர் குங்குமம் இல்லை என்பதை உணர்ந்தனர். இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவில் மணமகன் கேமராவைப் பார்த்து "திருமணச் சடங்குகளில் ஒரு சிறிய அதேநேரம் முக்கியமான விஷயம் குங்குமம். ஆனால், அதை நாங்கள் கொண்டுவர மறந்துவிட்டோம்" என்று கூறுகிறார்.
குங்குமம் இல்லாததால் திருமண விழா சற்று நேரம் பாதிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிப் போனார்கள். குடும்பத்தினர் பதறிப் போய் மண்டபத்திற்கு வெளியே ஓடி சென்று குங்குமத்தை வாங்கி இருந்தால் பதற்றம் மேலும் அதிகரித்தே இருக்கும். ஆனால், அவர்கள் அதைச் செய்யாமல் ஸ்மார்ட்டாக பிளிங்கிட் செயலியில் ஆர்டர் செய்தனர்.
குங்குமம்
வெறும் சில நிமிடங்களிலேயே குங்குமத்துடன் அந்த டெலிவரி ஊழியர் வந்துவிட்டார். இதனால் மீண்டும் சடங்குகள் தொடங்கப்பட்டன. குடும்பத்தினர் யாராவது வெளியே சென்றிருந்தால் அங்குக் குழப்பம் அதிகரித்தே இருக்கும்.. சரியாக வருவார்களா.. இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் குழம்பி இருப்பார்கள். ஆனால், பிளிங்கிட் தளத்தில் ஆர்டர் செய்ததால் குழப்பம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், டெலிவரி ஊழியர் எங்கே இருக்கிறார் என்பதையும் செயலியில் நொடிக்கு நொடி பார்க்க முடிந்தது.
இதனால் டென்ஷன் இல்லாமல் இருந்துள்ளனர். மணமகன் சடங்குகளை நிறைவு செய்ததும், அங்கிருந்த விருந்தினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். முக்கியமான தருணத்தில் நொடியும் தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் குங்குமம் வந்ததே இதில் ஹைலைட். அதன் பிறகு அங்கிருந்த அனைவரும் நிம்மதி அடைந்தனர். நவீனக் காலத்தில் டெலிவரி சர்வீஸ் எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
நெட்டிசன்கள்
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்த அவர்கள், "இந்த அழகான தருணத்தில்.. பூஜாவும் ஹ்ரிஷியும் ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான விஷயம் இல்லை என்பதை உணர்ந்தனர். அந்த இடத்தில் தான் இவர்களைக் காப்பாற்ற பிளிங்கிட் உள்ளே வந்தது! சடங்குகள் யாருக்கும் காத்திருக்காது.. திருமணமும் நல்ல நேரத்தில் நடந்தாக வேண்டும். இந்தச் சூழலில் தான் டெலிவரி செயலிகள் உள்ளே வந்து காப்பாற்றுகின்றன. நவீன காதல் கதைகளில் காதல் மட்டுமில்லை.. இன்ஸ்டண்ட் டெலிவரி உடனும் சேர்ந்தே வருகிறது" என்றார்.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. பல்வேறு தரப்பினரும் இந்த வீடியோவை கொண்டாடி வருகிறார்கள். பலரும் இந்த டெலிவரி ஊழியர்களை "மௌனமான சூப்பர் ஹீரோக்கள்" என்று பாராட்டினர். பலர் தங்கள் குடும்ப நிகழ்வுகளில் இதுபோல இன்ஸ்டண்ட் டெலிவரி எப்படி உதவியுள்ளது என்பதைப் பகிர்ந்து வருகிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications