பாதாளத்தில் விழுந்த பாலிவுட்.. நிமிர்ந்து நிற்கும் தென்னிந்தியா! பாசாங்கு காட்டும் இந்திகாரர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட்டில் வெளியாகும் பிரம்மாண்ட படங்கள் படுதோல்வியை தழுவி இருக்கும் சூழலில் ஒரு காலத்தில் இந்தி சினிமாவால் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்று வருகின்றன. இதனால் பாலிவுட் பிரபலங்கள் தென்னிந்திய திரையுலகை நம்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பாகுபலி, கேஜிஃஎப் பாணியில் பிரம்மாண்ட பொருட் செலவில் ரன்பீர் கபூர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் இயக்குநர் கரன் ஜோஹர் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் "பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல வுட்களை நாம் பிரித்து வைத்து இருக்கிறோம். இனி இந்தி, தெலுங்கு என்று சினிமாவை பிரித்து பார்க்காமல் இந்திய சினிமா என்றே அடையாளப்படுத்துவோம்." என்று அழைத்திருக்கிறார்.

அவமதித்த பாலிவுட்

அவமதித்த பாலிவுட்

ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவை ஒரு பொருட்டாகவே பாலிவுட் திரையுலகம் மதித்தது கிடையாது. தங்களை மிகக் கேவலமாக வட இந்திய சினிமாக்காரர்கள் நடத்தியதை சிரஞ்சீவி போன்ற பல முன்னணி தென்னிந்திய நடிகர்கள் மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், கொரோனாவுக்கு பின்னர் பாலிவுட் சினிமா பாதாளத்தில் விழுந்துவிட்டது. எந்த முன்னணி நடிகர் நடித்த பிரம்மாண்ட படமும் ஹிட் ஆகவில்லை.

பாதாளத்தில் இந்தி சினிமா

பாதாளத்தில் இந்தி சினிமா

அக்‌ஷய் குமார் நடித்த சாம்ராஜ் பிருத்விராஜ், ரன்வீர் சிங் நடித்த 83, ரன்வீர் கபூர் நடித்த ஷம்சீரா, கங்கனா ரனாவத் நடித்த தாக்கட், டாப்சி நடித்த சபாஷ் மித்து, அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா போன்ரா படங்கள் பல கோடி செலவி தயாரிக்கப்பட்டு படுதோல்வியடைந்தன. இதனால் பாலிவுட் திரையுலகமே படுநஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனங்களும் அதிக படங்களை தயாரிக்க முனைப்பு காட்டாததால் இந்தி சினிமாவில் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து இருக்கிறார்கள்.

 தென்னிந்திய சினிமாவின் வெற்றி

தென்னிந்திய சினிமாவின் வெற்றி

ஆனால் ஒருகாலத்தில் பாலிவுட் பிரபலங்களால் இழிவுபடுத்தப்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகங்கள் இந்திய அளவில் வசூல் சாதனை படைத்து வருகின்றன. விக்ரம், சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், மாநாடு, டாக்டர், டான், திருச்சிற்றம்பலம், சீதா ராமம், ஹோம், ஹிருதயம், பீஷ்ம பர்வம், பாகுபலி 1, பாகுபலி 2, கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2, ஷியாம் சிங்கா ராய், புஷ்பா என பல திரைப்படங்கள் திரையரங்குகளிலும் இந்திய அளவில் ஹிட் அடித்து இருக்கின்றன.

இறங்கி வரும் பாலிவுட்

இறங்கி வரும் பாலிவுட்

இதனால் வட இந்திய சினிமா ரசிகர்களும் பாலிவுட் படங்களைவிட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை கவனிக்க தொடங்கியுள்ளார்கள். இதனை உணர்ந்தே பாலிவுட்காரர்கள் தென் இந்திய சினிமாதுறை தோளில் சவாரி செய்ய தொடங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழத் தொடங்கி இருக்கிறது. பேன் இந்தியா என்ற பதத்தை உருவாக்கி தென் இந்திய இயக்குநர்கள், நடிகர்களை வைத்து இந்தி படங்களை தயாரிக்கிறார்கள். தென் இந்திய தயாரிப்பாளர்கள் அகில இந்திய அளவில் வசூல் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பேன் இந்தியா படங்களுக்கு செல்கின்றனர்.

இந்தியில் தமிழ் இயக்குநர்கள்

இந்தியில் தமிழ் இயக்குநர்கள்

பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கோங்ரா இயக்கும் சூரரை போற்று இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். புஷ்கர் - காயத்ரி இயக்கும் விக்ரம் - வேதா இந்தி ரீமேக்கில் சயிப் அலி கானும், ரித்திக் ரோஷனும் நடிக்கிறார்கள். இப்படி தமிழ் தெலுங்கு கன்னட திரையுலகினரின் தயவுடன் பாலிவுட் சினிமாவை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள்.

பன்முகத்தன்மையை பறிக்கும் பான் இந்தியா

பன்முகத்தன்மையை பறிக்கும் பான் இந்தியா

இப்படிதான் இயக்குநர் கரண் ஜோஹர் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே நடித்த லைகர் படத்தை பாலிவுட் பானியில் தயாரித்து பேன் இந்தியா படமாக ரிலீஸ் செய்தார். ஆனால், அந்த படம் எழும்புவதற்குள் நாக் அவுட் ஆனது. இதனால் பல கோடி நஷ்டம் அடைந்த கரண் ஜோஹர் தற்போது இந்திய சினிமா என்று ஒற்றுமை பாடம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றன. அந்தந்த மாநிலங்களுக்கு என தனித்தனி கலாச்சாரங்கள் இருக்கும்போது அந்தந்த மொழி மக்களுக்காக படம் எடுப்பதே பன்முகத்தன்மையை நிலைநாட்டும் என்கிறார்கள் பேன் இந்தியாவை எதிர்க்கும் சிலர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+