டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாஸ்கோவிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பதறிய பயணிகள்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யாவிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மிரட்டல் வந்திருக்கிறது.

இதனையடுத்து விமான நிலையம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் தரையிறங்கிய விமானத்தை பரிசோதித்ததில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

900 மாவட்டங்களா? அமெரிக்காவில் போய் தப்பாக கணக்கு காட்டிய அண்ணாமலை.. நோட் பண்ணீங்களா! உண்மை என்ன? 900 மாவட்டங்களா? அமெரிக்காவில் போய் தப்பாக கணக்கு காட்டிய அண்ணாமலை.. நோட் பண்ணீங்களா! உண்மை என்ன?

வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

நேற்று ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து டெல்லி புறப்பட்ட SU232 எனும் எண் கொண்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. நேற்றிரவு சரியாக 11.15 மணிக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. விமான நிலையம் முழுவதும் அலார்ட் செய்யப்பட்டது.

பரிசோதனை

பரிசோதனை

இந்த விமானத்தில் மொத்தம் 386 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து அதிகாலை 3.20 மணிக்கு ஓடுபாதை எண் 29ல் விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானத்தை பரிசோதித்ததில் அதில் எந்த வெடிகுண்டும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறியபோது, இவ்வாறு மிரட்டல் கடிதங்கள் வருவது இது முதல்முறையல்ல என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தாக்குதல்

அமெரிக்க தாக்குதல்

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதிகாரிகள் குறிப்பிட்டதைப் போல கடந்த 10ம் தேதி டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அன்றைய தினம் இரவு 10 மணியளவில் டெல்லியின் ரன்ஹோலா காவல் நிலையத்திற்கு இந்த அழைப்பு வந்திருந்தது. அதில் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட 9/11 தாக்குதல் போல இந்த தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர் மிரட்டல்கள்

தொடர் மிரட்டல்கள்

இதனையடுத்து பிரிட்டன் உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விமானம் தரையிறக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில், அந்த மிரட்டலும் போலியானது என்று பின்னர் தெரிய வந்தது. ஆக இப்படியான தொடர் மிரட்டல் அழைப்புகள், கடிதங்கள், மின்னஞ்சல்கள் வருவது இயல்பானதுதான் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இன்று டெல்லி விமானத்திற்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக உளவு அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.

English summary
The Airport Control Office received a bomb threat on a flight from Russia to Delhi's Indira Gandhi International Airport. Following this, the entire airport was alerted and precautionary arrangements were made. But the staff said no explosives were found during an inspection of the landed plane. This incident has created a lot of excitement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X