51 வயதில் காதல்.. கணவன் - 31 வயது மகனை உதறி இந்தியா வந்த பிரேசில் பெண்! 30 வயது நபருடன் திருமணம்
டெல்லி: பிரேசிலை சேர்ந்த 51 வயது நிரம்பிய பெண் தனது கணவர், மகனை உதறி தள்ளிவிட்டு குஜராத்தில் பழக்கமான 30 வயது நிரம்பிய சத்தீஸ்கர் இளைஞரை திருமணம் செய்ய இந்தியா வந்துள்ளார். இந்த இளைஞரின் வயது என்பது அவர் திருமணம் செய்த பெண்ணின் மகனை விட குறைவு. இவர்கள் 2 பேருக்கும் எப்படி காதல் பிறந்தது? வாங்க பார்க்கலாம்.
காதல்.. சாதி, மதம், இனத்தை கடந்த உன்னத உணர்வு. இதனால் தான் மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு என பலரும் தங்களின் மனம் கவர்ந்த நபர்களை காதலித்து கரம் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பிரேசில் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் தனது குடும்பத்தை கைவிட்டு சத்தீஸ்கரை சேர்ந்த 30 வயது இளைஞரை திருமணம் செய்துள்ளது தற்போது பேசுப்பொருளாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
அதாவது பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ரோஸி நாயிட் ஷிகேரா. இவருக்கு வயது 51. திருமணம் ஆனவர். இவருக்கு கணவர் மட்டும் 31 வயது நிரம்பிய மகன் உள்ளார். சமீபத்தில் ரோஸி நாயிட் ஷிகேரா கடந்த ஆண்டு நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தார். குஜராத் மாநிலம் குச் பகுதியில் அவர் சுற்றிப்பார்த்தார். இந்த வேளையில் ரோஸி நாயிட் ஷிகேரா என்பவருக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பவன் கோயல் (வயது 30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பவன் கோயல் சத்தீஸ்கர் மாநிலம் பிந்த் பகுதியை சேர்ந்தவர்.
இந்த பழக்கம் இருவருக்கும் நட்பாக மாறியது. அதன்பிறகு அவர்கள் சமூக வலைதளங்களில் பேசிவந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிரேசில் சென்றாலும் கூட ரோஸி நாயிட் ஷிகேராவால், பவன் கோயலை மறக்க முடியவில்லை. இதனால் ரோஸி நாயிட் ஷிகேரா ஒரு முடிவு செய்தார். தனது கணவர் மற்றும் 31 வயது மகன் ஆகியோரை விட்டுவிட்டு இந்தியா வந்து பவன் கோயலை திருமணம் செய்து வாழ முடிவு செய்தார்.
இதுபற்றி அவர் தனது இளம் காதலன் பவன் கோயலிடம் தெரிவித்துள்ளார். அவரும் இந்தியா புறப்பட்டு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து ரோஸி நாயிட் ஷிகேரா தனது கணவர் மற்றும் மகனை கைவிட்டு இந்தியா வந்துள்ளார். பிரேசிலில் பெரும் செல்வந்த குடும்பத்தில் ரோஸி நாயிட் ஷிகேரா வாழ்ந்தாலும் கூட அவர் பவன் கோயலுக்காக அதனை உதறி தள்ளிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதற்காக பத்திரிகை அடித்து வழங்கி உள்ளனர். விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
தற்போது பவன் கோயல் டெல்லியில் வசித்து வருகிறார். இதனால் அவர்களின் திருமணம் டெல்லியில் வைத்து நடைபெற உள்ளது. திருமணத்துக்கு பிறகு ரோஸி நாயிட் ஷிகேரா - பவன் கோயலுடன் நம் நாட்டில் வாழ உள்ளார். இந்தயா குடியுரிமையை பெறுவதற்கான ஏற்பாடுகளையும் தொடங்க உள்ளார். இப்படி கடல் கடந்து பெண் ஒருவர் இந்தியரை திருமணம் செய்வது இது முதல் முறையல்ல. அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications