மீண்டும் ஒன்றிணைந்த பிரிக்ஸ் தலைவர்கள்.. அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்! விழிபிதுங்கிய டிரம்ப்
டெல்லி: பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்கும் வீடியோ கான்பரன்ஸ் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். அமெரிக்காவின் வரி பஞ்சாயத்துகளுக்கு நடுவே இந்த மாநாடு நடப்பதால் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
இந்த மாநாடு பிரேசிலின் முயற்சியால் நடத்தப்படுகிறது. வளர்ந்து வரும் பெரிய நாடுகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா விதித்துள்ள வரி விவகாரத்திற்கு தீர்வு காணவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மாநாடு அமெரிக்காவுக்கு எதிரான மாநாடுதான். ஆனால் வெளிப்படையாக இப்படி சொல்லாமல், பிரிக்ஸ் நாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். சமீபத்தில் சீனாவில் நடந்த எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது பிரிக்ஸ் வீடியோ கான்பரன்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்கா 50% அளவுக்கு வரியை விதித்து இருக்கிறது. இந்தியா நீண்ட காலமாக அமெரிக்காவுடன் நட்பு குழுவில் இருந்து வந்தது. இருப்பினும் வரியை போட்டிருப்பது நம்மை பெரிய அளவுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது. வரி காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நகைகள் ஜவுளி பொருட்கள் மருந்து துறை கடுமையான வீழ்ச்சி சந்தித்திருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்திய பொருளாதாரத்தை மாற்று பாதையில் செலுத்தும் முயற்சியாக சீனாவுடன் இந்தியா கைகோர்க்க தொடங்கி இருக்கிறது.
இந்த சூழலில்தான் பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளது. இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதல் காரணம் சொந்த கரன்சியில் வர்த்தகம். தற்போது ரஷ்யாவுடன் இந்தியா சொந்த கரன்சியில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவுடன் 90% அளவுக்கு நாம் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்து வருகிறோம். 2024-25 நிதியாண்டில், இந்தியா-ரஷ்யா இடையேயான மொத்த வர்த்தகம் ரூ.42,940 கோடியாகும்.
அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனும் சொந்த கரன்சி வர்த்தகத்தை நாம் தொடங்கியுள்ளோம். கடந்த 2023ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் கச்சா எண்ணெய்யை சொந்த கரன்சியில் விற்பனை/கொள்முதல் செய்து வருகின்றன.
இதற்கு முன்னர் டாலரில் வர்த்தகம் செய்த போது நாம் முதலில் டாலரை விலை கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் அந்த டாலரை வைத்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டியது இருந்தது. எனவே நமது சொந்த கரன்சியான ரூபாயின் மதிப்பு பெரிய அளவுக்கு வளரவில்லை.
இப்போது பிக் பிரிக்ஸ் நாடுகளுடன் சொந்த கரன்சியல் வர்த்தகம் செய்வதால், நம்முடைய கரன்சியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. அதேபோல அமெரிக்க டாலரை வெளியில் காசு கொடுத்து வாங்க வேண்டியது காண தேவை ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. அமெரிக்கா டாலரின் தேவையை குறைத்துக் கொண்டாலே டிரம்ப் போடும் வரியின் பாதிப்புகளை நம்மால் எளிதில் எதிர் கொண்டு விட முடியும். எனவேதான் பிரிக்ஸ் நாடுகளுடன் மேலும் அதிகமாக சொந்தக்கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்தியா விரும்புகிறது.
இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவே பிரிக்ஸ் மாநாடு, கூட்டங்கள், சந்திப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியா தீவிரமாக பங்கெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான் இன்று நடைபெறும் வீடியோ கான்பிரன்ஸ் மாநாட்டிலும் இந்தியா பங்கெடுத்து இருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் சொந்த நாட்டு கரன்சியில் வர்த்தகம் செய்யப்பட்டால் அமெரிக்க டாலருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். எனவேதான் பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா ஒன்றாக இருப்பதை டிரம்ப் சகித்துக் கொள்ள முடியவில்லை.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications