இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் உணர்ச்சிபெருக்கு.. 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள்.. நெகிழ்ச்சி
டெல்லி: 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தது. அப்போது நாடு இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிந்தது. அப்போது பல்வேறு குடும்பங்கள் பிரிந்தன. ஒரே குடும்பத்தில் சிலர் இந்தியாவில் இருந்தனர். சிலர் பாகிஸ்தானில் சென்று விட்டனர்.
இப்படி பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்கள் சுமார் 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது முகம்மது சித்தி, ஹபீப் இரண்டு சகோதரர்கள் அப்போது 8 வயது இருக்கும்போது பிரிந்தனர்.

74 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
ஹபீப் தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருகிறார். அதே வேளையில் முகம்மது சித்தி பாகிஸ்தானின் ஃபைஸ்லாபாத்தில் வசித்து வருகிறார். சுமார் 74 ஆண்டுகளாக இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

உணர்ச்சி பெருக்கு
74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் இருவரும் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் விட்டனர். ஒருவரை ஒருவர் கட்டியணைத்த சகோதரர்கள் தங்கள் பிரிவின் வலியையும், பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர். தங்களது சிறு வயது சம்பவங்களையும் அசை போட்டுக் கொண்டனர். சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெகிழ்ச்சி வீடியோ
இது தொடர்பான நெட்டின்சன்கள் நெகிழ்ச்சி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ''நீண்ட நாட்களுக்குப் பிறகு, நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட ஒரு விஷயத்தைப் பார்த்தேன். இரண்டு சகோதரர்கள், ஒருவர் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவர் மற்றும் மற்றொருவர் பாகிஸ்தானின் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பிரிந்து 74 ஆண்டுகளுக்குப் பிறகு கர்தார்பூரில் சந்தித்தனர்'' என்று ஒருவர் கூறியுள்ளார்.

குருநானக் வாழ்ந்த இடம்
இரண்டு சகோதரர்களும் சந்தித்துக் கொண்ட குருத்வாரா சர்தார் சாஹிப் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் அங்கு சிறிது காலம் வாழ்ந்ததாக கூறப்படுவதால் அவரது நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது இது பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இது தொடர்பாக 2019-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூரை பார்வையிட வசதியாக, தேரா பாபா நானக்கிலிருந்து சர்வதேச எல்லை வரையிலான ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வரை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்து. இந்த நேரங்ககளில் சீக்கிய பக்தர்கள் விசா இல்லாமல் அங்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications