டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிரடி.. நமக்கு யார் கரண்ட் வேண்டும்.. இனி நாமே தேர்வு செய்யலாம்.. மத்திய அரசு அறிவிப்பு

மின்துறையும் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: மின்சார சப்ளை தொடர்பாக புதிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப் போவதாகவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மறைமுக தனியார்மயமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசும்போது, நுகர்வோருக்கு தாங்கள் எந்த நிறுவனத்திடமிருந்து மின்சாரம் பெற விருப்பமோ அதை தேர்வு செய்து பெறலாம் என்று அறிவித்தார்

 Budget 2021: Choice for Consumers to choose their own power distribution company

தனியார் மின் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்ற அறிவிப்பையும் பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்தார். இதன் மூலம் தனியார் மின் நிறுவனங்கள் வசம் மின்சார விநியோகம் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல்வேறு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இனி அதிகரிக்கும். அவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கும் பணியையும் மத்திய அரசு முடுக்கி விடும். தற்போது மொபைல் போன் எண்களை அதே போல வைத்துக் கொண்டு சர்வீஸ் புரவைடர்களை மாற்றுகிறோம் இல்லையா அதுபோல இனி நமக்குத் தேவையான மின்நிறுவனங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,000 கோடி...பட்ஜெட் ஒதுக்கீடு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,000 கோடி...பட்ஜெட் ஒதுக்கீடு

அதன்படி குறிப்பிட்ட பகுதியில் அரசு மின் உற்பத்தி நிறுவனம் தவிர்த்து பல்வேறு தனியார் மின் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். அதில் நமக்கு யார் தேவையோ அவர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 2003 மின்சார சட்டம் திருத்தப்படவுள்ளது.

English summary
Choice for Consumers to choose their own power distribution company
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X