விண்வெளித் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி.. டிசம்பரில் மங்கள்யான் திட்டம்
டெல்லி: விண்வெளித் துறைக்கு கடந்த பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ரூ.13,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 8,228 கோடி ரூபாய், மூலதன செலவீனமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையின் கீழ், நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டட் என்ற பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டிருந்தது அல்லவா, அதற்கு பட்ஜெட்டில் ரூ700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி-சிஎஸ்51 ராக்கெட் ஏவுதலை, நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட் செயல்படுத்த உள்ளது. இந்த ராக்கெட்டில், பிரேசில் நாட்டின் அமேசோனியா செயற்கைக்கோள் மற்றும் நமது நாட்டின் சில செயற்கைக்கோள்கள் இடம் பெறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்த பட்ஜெட்டில் விண்வெளித்துறைக்கு 13,949.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கடந்த 2019-20 பட்ஜெட்டை ஒப்பிட்டால், சுமார் 900 கோடி அதிகமாகும். 2020-21ம் நிதியாண்டு பட்ஜெட்டை விட இது ரூ.4,449 கோடி அதிகமாகும்.
மனிதர்களுடனான விண்வெளி பயணமான ககன்யானின் ஒரு பகுதியாக, நான்கு இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் விண்வெளி பயண அம்சங்கள் குறித்து பயிற்சி பெறுகின்றனர். "முதல் ஆளில்லா ஏவுதல் 2021ம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது," என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications