மருத்துவ சுற்றுலாவின் மையமாக இந்தியா மேம்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இதில், நாடெங்கும் ஐந்து மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்றும், மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, மருத்துவ சுற்றுலாவின் மையமாக இந்தியா மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9 ஆவது பட்ஜெட்டாகும். மத்திய பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும்

பொருளாதார மேம்பாடு
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். பல்வேறு நோய்களுக்கன மருந்தகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.10,000 கோடியில் பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஜவுளித் துறை
ஜவுளித்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளன. ஜவுளித்துறையை சர்வதேச அளவில் போட்டியிட புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. காதி, கைத்தறி, கைவினைப் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் தொடங்கப்பட உள்ளது. புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க தொழில்துறை, கல்வித்துறை, இடையே ஒருங்கிணைப்பு திட்டம் கொண்டு வரப்படும். இயற்கை இழைகளில் தன்னிறைவுக்கான தேசிய இழைத் திட்டம். பாரம்பரியத் தொகுப்புகளை நவீனமயமாக்குவதற்கான ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படும் என்றார்.
மருத்துவ சுற்றுலா மையம்
மேலும், நாடெங்கும் 5 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ சுற்றுலாவின் மையமாக இந்தியா மேம்படுத்தப்படும். மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும். இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய் ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications