மோடி அரசின் பட்ஜெட்டில் முதல் முறையாக ஒலித்த தமிழ்.. அதுவும் இப்படி ஒலித்தது தான் ஹைலைட்டே
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் பட்ஜெட்டின் போது ஒருமுறை கூட தமிழ் ஒலித்தது இலலை. ஆனால் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்த பிறகு இந்த பட்ஜெட்டில் முதல் முறையாக தமிழ் ஒலித்துள்ளது.
2004 முதல் 2014 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்ததார்.
தமிழகத்தைச் சேர்ந்த அவர் ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போது திருக்குறள் அல்லது எதேனும் தமிழ் நூலை பட்ஜெட்டில் மேற்கொள்காட்டி பேசுவார்.

பட்ஜெட்டில் தமிழ்
இதனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பட்ஜெட்டில் என்ன இடம்பெறுகிறதோ இல்லையோ, கட்டாயம் ப.சிதம்பரத்தின் மூலம் தமிழ் இடம் பெறும்.

மோடி ஆட்சியில்
இந்த சூழலில் மத்தியில் 2014ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. 2014ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் நிதியமைச்சராக அருண்ஜெட்லி இருந்தார். இதனால் அவர் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதனால் தமிழ் மேற்கோள்களோ அல்லது தமிழ் இலக்கியங்களோ பட்ஜெட்டில் இடம் பெற்றதில்லை.

இன்று பட்ஜெட் தாக்கல்
ஆனால் மோடி அரசு இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. நிதியமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் இடம் பெற்றார். அவர் தான் இன்றைக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழில் மேற்கொள்
இந்த பட்ஜெட்டில் வர்த்தகம் மற்றும் வரிச்சலுகைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வேலைவாய்ப்பு திறனை அதிகரித்தல் உள்பட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன் தமிழ் இலக்கியமான புறநானூறில் வந்ததை மேற்கோள் காட்டி பேசினார்.

வியந்த உறுப்பினர்கள்
பிசிராந்தையார் வரி விதிப்பு குறித்து பாண்டிய மன்னனுக்கு கூறிய அறிவுரையை அழகாக தமிழில் கூறி பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துரைத்தார். இதை கேட்டு பிரதமர் மோடி உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வியந்தனர்.

எப்படி வரி விதிக்க வேண்டும்
இதன் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பட்ஜெட்டில் தமிழ் மொழி ஒலித்துள்ளது. அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனால் ஒலித்துள்ளது. அதுவும் எப்படி.. ஒரு அரசன் தன் நாட்டு மக்களிடம் எப்படி வரி வசூலிக்க வேண்டும் என்பது தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒலித்ததுதான் இதில் ஹைலைட்டே...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications