புல்லி பாய் செயலியை உருவாக்க நீரஜ் பயன்படுத்தியது அஸ்ஸாம் அரசின் இலவச லேப்டாப்.. பரபரப்பு தகவல்கள்
டெல்லி: புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் எப்போது பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாக இருப்பார் என்றும் அவருடன் ஒரு சிறிய நண்பர்கள் வட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்றும் நீரஜின் தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி புல்லி பாய் எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லீம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அந்த செயலியில் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புல்லி பாய் செயலியின் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புல்லி பாய் செயலி
இந்த புல்லி பாய் செயலியின் பின்னணியில் பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து பெங்களூர் விரைந்த மும்பை போலீஸார் விஷால் ஜாவை கைது செய்தனர். அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்.

பொறியியல் மாணவர் கைது
இதில் விஷால் ஜா இந்துத்துவா ஆதரவாளர் என தெரியவந்தது. தன்னுடன் அரசியல் ரீதியாக முரணுள்ள பெண்களை ஏலம் விடுவதாக அறிவித்ததை ஒப்புக் கொண்டார். இந்த செயலியை தொடங்குவதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்த மேலும் இருவரை மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

18 வயது இளம்பெண் கைது
அவர்களில் ஒருவர் 18 வயது இளம்பெண், இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் மூன்றாவது நபராக உத்தரகண்டை சேர்ந்த 21 வயது மாணவர் மயங்க் ராவல் கைது செய்யப்பட்டார். இந்த 18 வயது பெண் தாய், தந்தையை இழந்தவராம். பள்ளி படிப்பை முடித்துவிட்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறாராம்.

நேபாள நண்பர்
நேபாளத்தை சேர்ந்த அவரின் நண்பர் ஒருவர் கொடுத்த அறிவுறுத்தலின் பெயரில் இதை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த நேபாள நண்பர் கியூ என அழைக்கப்படுகிறாராம். அவரை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை போலீஸ் எடுக்கத் தொடங்கியுள்ளது.

விஸ்வரூபம் எடுத்த புல்லி பாய்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த செயலியை உருவாக்கி 21 வயது நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் பதுங்கியிருந்த இவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நீரஜும் லேப்டாப்பும்
இந்த நிலையில் நீரஜின் தந்தை தசரத பிஷ்னோயிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணை பெற்ற மாணவர்களை ஊக்குவிக்க அஸ்ஸாம் அரசு சார்பில் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் அதிகம் மதிப்பெண் பெற்ற நீரஜுக்கும் லேப்டாப் கிடைத்தது.

குறைந்த எண்ணிக்கை
கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் தொடங்கிய நாள் முதல் அந்த லேப்டாப்பை நீரஜ் விடவே மாட்டார். பேஸ்ட் போட்டு ஒட்டியது போல் கையில் லேப்டாப்புடன் இருப்பார். கதவை தாழிட்டுக் கொண்டு லேப்டாப்புடன் உள்ளே சென்றால் வெளியே வர அத்தனை தாமதம் ஆகும். அவர் என்ன செய்கிறார் என்றே எங்களுக்கு தெரியாது. சிறு வயதிலிருந்தே தன்னை நீரஜ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு குறைந்த எண்ணிக்கையிலான நண்பர்களே உள்ளனர்.
Recommended Video

லேப்டாப்பும் கையுமாக
நீரஜ் 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே அவரது லேப்டாப் பலமுறை பள்ளி முதல்வரால் பறிமுதல் செய்யப்பட்டது. நான் போய் அவரிடம் பேசி லேப்டாப்பை மீண்டும் பெற்று தருவேன். அந்த செயலியை உருவாக்குவதற்கு நீரஜின் பின்னணியில் யார் இருந்தார்கள் என தெரியவில்லை. அடுத்த மாதம் நீரஜுக்கு செமஸ்டர் தேர்வுகள் உள்ளதால் அவரை விரைந்து வீடு திரும்ப கடவுளை பிரார்த்திக்கிறேன். என்றார். போபாலில் உள்ள விஐடியில் 2ஆம் ஆண்டு கணினி அறவியல் படித்து வருகிறார் நீரஜ். இவர் 10ஆம் வகுப்பில் 86 சதவீதமும் 12 ஆம் வகுப்பில் 82 சதவீதமும் பெற்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications