டெல்லி: 14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 லோக்சபா தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உற்சாகமான வெற்றியை பெற்றிருக்கின்றன.
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, பீகார், அசாம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய 13 மாநிலங்களில் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலி, ஹிமாச்சல பிரதேசத்தின் மந்தி, மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும் அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
அசாமில் 5, மேற்குவங்கம் 4, மத்தியப் பிரதேசம் 3, ஹிமாச்சல் பிரதேசம் 3, மேகாலயா 3, பிகார் 2, கர்நாடகா 2, ராஜஸ்தான் 2, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், நாகாலாந்து, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் தலா 1 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன:
Nov 02, 2021, 7:15 pm IST
ராஜஸ்தான் வல்லபநகரில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரித்தி ஷக்தாவத் 20,606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தெலுங்கானா மாநிலத்தின் ஹுசூராபாத் இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் வேட்பாளர் கெல்லு ஸ்ரீனிவாஸ் யாதவ் பின்னடைவு
Nov 02, 2021, 5:41 pm IST
பாஜக வேட்பாளர் எட்டல ராஜேந்தர் 14,618 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்
Nov 02, 2021, 5:41 pm IST
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் பத்வேல் சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது
Nov 02, 2021, 3:59 pm IST
ராஜஸ்தான் மாநிலம் தரியாவாத் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் 18,725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
தரியாவாத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் இரண்டாவது இடமும், பாஜக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது
Nov 02, 2021, 3:58 pm IST
வல்லபநகரில் காங்கிரஸ் 20,400 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது
வல்லபநகர் தொகுதியில் பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
Nov 02, 2021, 3:15 pm IST
ஹிமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும் ஆளும் பாஜகவை வீழ்த்தியது காங்கிரஸ்
Final #UPDATE | Congress wins all three Assembly seats in Himachal Pradesh that went to by-polls on October 30th. pic.twitter.com/HKcYAlHtEa
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டத்தில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக தோல்வி
ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாச மனே 7591 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Nov 02, 2021, 2:14 pm IST
கர்நாடகா
16 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் கர்நாடகாவின் ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
Nov 02, 2021, 2:13 pm IST
ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் 73,450 வாக்குகளும், பாஜக 66,622 வாக்குகளும் பெற்றுள்ளன
Nov 02, 2021, 1:33 pm IST
ஹிமாச்சல் பிரதேசம்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது
Nov 02, 2021, 1:04 pm IST
கர்நாடகா
கர்நாடகாவின் சிந்கி சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பூசனூர் 31,185 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
Nov 02, 2021, 12:47 pm IST
மண்டி லோக்சபா தொகுதியிலும், அர்கி சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை
Nov 02, 2021, 12:47 pm IST
ஃபதேபூரில் பாஜக முன்னிலையில் உள்ளது
Nov 02, 2021, 12:30 pm IST
மத்தியப் பிரதேசம்
மத்திய பிரதேச சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது
Nov 02, 2021, 12:30 pm IST
ஹிமாச்சல் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் 2 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன
Nov 02, 2021, 12:09 pm IST
லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்
தாத்ரா நகர் ஹவேலியில் சிவசேனா- 57.32%; பாஜக- 37.67% வாக்குகள்
Nov 02, 2021, 12:08 pm IST
ஹிமாச்சல் பிரதேசம்
ஹிமாச்சல பிரதேசம் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு காங். 49.13%; பாஜக- 48.08% வாக்குகள்
Nov 02, 2021, 12:08 pm IST
மத்தியப் பிரதேசம்
ம.பி. லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் பாஜக 50.19%; காங். 42.81% வாக்குகள்
Nov 02, 2021, 12:06 pm IST
திரிணாமுல் கொண்டாட்டம்
மே.வங்க இடைத்தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து திரிணாமுல் காங். தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
#WATCH | TMC workers celebrate outside a counting centre in Dinhata, Cooch Behar as the party leads on all 4 seats in the by-polls to the State Assembly.
ஹங்கல் தொகுதியில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு; காங்கிரஸ் 36,415; பாஜக 32,002; ஜேடிஎஸ் 374
Nov 02, 2021, 11:31 am IST
மகாராஷ்டீிரா
ஒரு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் 56.22%; பாஜக 37.21% வாக்குகள்
Nov 02, 2021, 11:30 am IST
ஹிமாச்சல் பிரதேசம்
3 தொகுதி இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் 48.18%; பாஜக 22.57% வாக்குகள்
Nov 02, 2021, 11:30 am IST
தெலங்கானா
ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 46.56%; தெலுங்கானா ராஷ்டிர சமிதி 44.80% வாக்குகள்
Nov 02, 2021, 11:24 am IST
மத்தியப் பிரதேசம்
3 தொகுதி சட்டசபை தேர்தலில் பாஜக 50.78%; காங்கிரஸ் 42.00% வாக்குகள்
Nov 02, 2021, 11:24 am IST
ராஜஸ்தான்
2 தொகுதி இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் 38.75%; பாஜக 26.24% வாக்குகள்
Nov 02, 2021, 11:23 am IST
கர்நாடகா
2 தொகுதி சட்டசபை தேர்தலில் பாஜக 52.79%; காங்கிரஸ் 43.68%; ஜேடிஎஸ் 1.57% வாக்குகள்
Nov 02, 2021, 11:23 am IST
மேற்கு வங்காளம்
4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் இதுவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 78.28% வாக்குகள்; பாஜக 14.47%
Nov 02, 2021, 11:23 am IST
அஸ்ஸாம்
5 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில் பாஜக அணி 39.87% வாக்குகள்; காங்கிரஸ் 15.28%
READ MORE
6:57 PM, 1 Nov
பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே இந்த இடைத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்
6:57 PM, 1 Nov
காலை 9 மணி முதல் டிரெண்ட்டிங் வெளியாக ஆரம்பிக்கும், ரிசல்ட் மாலை 5 மணிக்குள் தெரிந்து விடும்
6:57 PM, 1 Nov
29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், 3 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது
6:27 AM, 2 Nov
இடைத்தேர்தல் நடைபெற்ற 29 சட்டசபை தொகுதிகளில் 15 இடங்கள் பாஜகவிடம் இருந்தன
6:30 AM, 2 Nov
- அஸ்ஸாமில் பாஜகவுக்கு தாவிய 3 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
6:30 AM, 2 Nov
- வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 9 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
6:31 AM, 2 Nov
- கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதல்வரான பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல்
6:32 AM, 2 Nov
- ராஜஸ்தானில் 2 தொகுதி இடைத்தேர்தல்களில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் முதல்வர் அசோக் கெலாட்.
6:32 AM, 2 Nov
- மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளையுமே திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றுமா?
6:34 AM, 2 Nov
- ஹரியானாவில் சவுதாலாக்களின் கோட்டையான எல்லனாபாத் தொகுதியில் இம்முறையும் அபய் சவுதாலா வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு
6:34 AM, 2 Nov
- தெலுங்கானாவில் ஹுசூராபாத் தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஈடலா ராஜேந்தர் போட்டி.
6:34 AM, 2 Nov
- 3 லோக்சபா தொகுதி, 29 சட்டசபை தொகுதிகளுக்கான அக்.30 இடைத்தேர்தல்களில் 50% முதல் 73% வரை வாக்குகள் பதிவாகின
6:35 AM, 2 Nov
- இடைத்தேர்தல் நடைபெற்ற 29 சட்டசபை தொகுதிகளில் 9 காங்கிரஸ் வசம் இருந்தன; மாநில கட்சிகள் 5 இடங்களில் வென்றிருந்தன.
6:35 AM, 2 Nov
- இடைத்தேர்தல் நடைபெற்ற 29 சட்டசபை தொகுதிகளில் 15 இடங்கள் பாஜகவிடம் இருந்தன
6:35 AM, 2 Nov
- ஹிமாச்சல பிரதேசம்: மாண்டி தொகுதி எம்.பி.யாக இருந்த ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசம்: காண்ட்வா எம்.பி.யாக இருந்த நந்த்குமார் சிங் சவுகான், தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதி எம்.பி.யாக இருந்த மோகன் தேல்கர் ஆகியோர் மரணமடைந்ததால் 3 தொகுதிகளில் இடைத் தேர்தல்
7:11 AM, 2 Nov
அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
7:35 AM, 2 Nov
இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது
8:01 AM, 2 Nov
29 சட்டசபை தொகுதிகள், 3 லோக்சபா தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
8:11 AM, 2 Nov
தாத்ரா நகர் ஹவேலி லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன
8:19 AM, 2 Nov
ஹிமாச்சல பிரதேசத்தில் 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 25 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
8:22 AM, 2 Nov
மேற்கு வங்கம்: 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
West Bengal: Results of four assembly seats -- Dinhata, Khardaha, Gosaba (SC), and Santipur -- that went into bypolls on October 30 will be announced today; visuals from Dinhata College counting centre. pic.twitter.com/5NZgErIotN
Huzurabad தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்
Telangana: Counting of votes for by-election to three Parliamentary constituencies in three states and 30 Assembly constituencies in 14 states underway this morning. Visuals from SRR College in Huzurabad, Karimnagar District. pic.twitter.com/1dCV2QSQlM
ம.பி, ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக; தாத்ரா நகர் ஹவேலியில் சிவசேனா முன்னிலை
9:39 AM, 2 Nov
சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம்
அஸ்ஸாமில் 1 தொகுதியில் பாஜக; பீகாரில் 1 தொகுதியில் ஆர்ஜேடி, ஹிமாச்சல பிரதேசத்தில் 1 தொகுதியில் காங். முன்னிலை; கர்நாடகாவில் தலா 1 இடத்தில் பாஜக, காங். முன்னிலை
By-election to Assembly constituencies across 14 states | BJP leading in 1 out of 5 seats in Assam, RJD in 1 out of 2 seats in Bihar, Congress in 1 out of 3 seats in Himachal Pradesh and BJP & Congress on one each in Karnataka. pic.twitter.com/eLbwkN2JCT
By poll election results today live 2021: By-election results for 3 Lok Sabha constituencies and 29 Assembly constituencies will be released today. Voting starts at 8 p.m, here you can find live updates in Tamil.