குட்டையை குழப்பி விடும் பிரசாந்த் கிஷோர்.. கரை சேருவாரா? இதுதான் பீகார் அரசியல் கணக்கு
டெல்லி: தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல் தலைவராக மாறிய பிரசாந்த் கிஷோர் இப்போது பீகார் தேர்தலில் களமிறங்குகிறார். அவர் வென்றால் ஆளும் கட்சி இல்லையென்றால் படுதோல்வி என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். இந்த பிளான் அவருக்கு கை கொடுக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியாவில் மிகவும் அனுபவமிக்க ஒரு தேர்தல் வியூக வகுப்பாளராகக் கருதப்பட்டவர் பிரசாந்த் கிஷோர்.. 2014 லோக்சபா தேர்தல் தொடங்கிப் பல தேர்தல்களுக்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பயணித்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் இப்போது ஜன் சுராஜ் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கி பீகார் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பீகார் தேர்தல்
பீகார் தேர்தலில் ஒன்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைப்போம் அல்லது மிக மோசமான தோல்வியைத் தழுவுவோம். இரண்டில் ஒன்றுக்குத் தான் வாய்ப்பு இருக்கிறது என்றே பிரசாந்த் கிஷோர் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். இதனால் அவர் மீதான கவனம் அதிகரித்துள்ளது. அவரது கட்சி பீகாரில் கேம் சேஞ்சராக இருக்குமா.. இல்லை வெற்றி தோல்வியை மட்டும் குழப்பி விடுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் புதிய கட்சிகள் பொதுவாக மூன்று வழிகளில் உருவாகின்றன
- செல்வாக்கு மிக்க தலைவர்கள் கட்சியை ஆரம்பிப்பது முதல் வகை.. 1983ல் ஆந்திராவில் என்.டி. ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தது சொல்லலாம். இப்போது விஜய் தவெகவை ஆரம்பித்தது ஆகியவற்றைச் சொல்லலாம்.
- குறிப்பிட்ட நோக்கங்களுடன் செயல்படும் அமைப்புகளின் தலைவர்கள் கட்சியை ஆரம்பிப்பது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்தது மிகச் சிறந்த ஒரு உதாரணமாகச் சொல்லலாம். கிட்டத்தட்ட அதே பாணியில் தான் பிரசாந்த் கிஷோர் தற்போது ஜன் சூராஜ் கட்சியை ஆரம்பித்துள்ளார்.
- ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வருந்து புதிய கட்சியை ஆரம்பிப்பது. உட்கட்சி மோதல்களால் ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்து இன்னொரு கட்சியைத் தொடங்குவது. அதிமுக, ஜேடியு உள்ளிட்ட கட்சிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இதில் முதல் இரு வகையில் கட்சியை ஆரம்பிக்கும்போது வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். ஆனால், மூன்றாம் வகையில் கட்சியை ஆரம்பிக்கும்போது அது பெரியளவில் கை கொடுக்காது. அவை தாய் கட்சியின் வாக்குகளைப் பிரித்து, வெற்றி தோல்வியை மட்டுமே மாற்றி அமைக்கும்.
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட முக்கிய கட்சிகள்
ஆந்திரா: 1983ல் தெலுங்கு தேசம் கட்சி 46% வாக்குகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
அசாம்: 1985-ல் அசோம் கன பரிஷத் அசாம் போராட்டத்தின் மூலம் உருவாகி, 34.5% வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
ஆம் ஆத்மி: 2013-ல் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பாஜக வெற்றியைத் தடுத்தது. முதலில் 29.5% வாக்குகளுடன் 28 இடங்களைப் பெற்றது. இருப்பினும், அதன் பிறகு 10 ஆண்டுகள் அங்குத் தொடர்ந்து ஆட்சியை அமைத்தது.
ஆந்திரா: 2009-ல் ஆந்திராவில் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சி 16.32% வாக்குகளுடன் 18 இடங்களை வென்றது. சிரஞ்சீவி கட்சி வாக்குகளைப் பிரித்ததால்.. காங்கிரஸ் வெல்லும் சூழல் உருவானது.
பீகார்: 2020ல் பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி 5.66% வாக்குகளைப் பெற்று, ஒரே ஒரு இடத்தில் வென்றது. ஆனால், 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிதிஷ் குமார் கட்சியின் வெற்றியை இது தடுத்து நிறுத்தியது.
புதிய கட்சிகளால் வெற்றியைப் பெற முடியவில்லை என்றாலும் பல நேரங்களில் அது வெற்றி தோல்வியைப் புரட்டிப் போடுவது தெளிவாகத் தெரிகிறது.
பீகார் தேர்தல்
பீகார் தேர்தலைப் பொறுத்தவரை 18% வாக்குகள் தான் முக்கியமானது. 18% வாக்குகளைப் பெற்றால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற போதிலும் அது வெற்றி தோல்வியை மாற்றி அமைக்கும். தேர்தலில் சீரியஸான போட்டியாக அப்போது தான் கருத முடியும். 20%க்கு மேல் பெற்றால் கணிசமான தொகுதிகளை பீகாரில் பெற முடியும்.
வெல்ல முடியுமா?
எவ்வளவு சீட்களில் வெல்கிறோம் என்பதைத் தாண்டி, அந்த 18%ஐ விட கூடுதல் வாக்குகளைப் பெற்றால் தான் அது ஜன் சூராஜ் எதிர்காலத்திற்கு நல்லது. ஆனால், பிரசாந்த் கிஷோர் அதை நோக்கிச் செல்லவில்லை.. வென்றால் ஆளும் கட்சி இல்லை என்றால் படுதோல்வி என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். பீகார் போன்ற மாநிலத்தில், தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகள் மிகக் குறைவானது. சில நூறு வாக்குகள் கூட அங்கு யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பதையே மாற்றுவதாக இருக்கிறது.
இதனால் பிரசாந்த் கிஷோர் அங்கு போட்டியிடுவது தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்குமே தவிர.. அவரால் இந்த தேர்தலில் வென்று ஆட்சியை அமைக்க முடியாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications