முகம் மாறிய ஜஸ்டின் ட்ரூடோ.. தனித்து விடப்பட்ட கனடா! இந்தியா என்னும் யானையிடம் மோதி.. வீழும் எறும்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவிடம் நேருக்கு நேர் மோதிய காரணத்தால் கனடா கொஞ்சம் கொஞ்சமாக தனித்து விடப்பட்டு உள்ளது. என்னதான் கனடாவிற்கு உளவு ரீதியான உதவிகளை "ஃபைவ் அலையன்ஸ்" எனப்படும் 5 நாடுகள் உதவி செய்தாலும் கூட சர்வதேச அளவில் கனடா கொஞ்சம் கொஞ்சமாக இந்த விஷயத்தில் ஓரம்கட்டப்பட்டு உள்ளதாகவே உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார். காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தனது ஏஜெண்டுகளை அனுப்பி இவரை கொலை செய்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Canada vs India issue: Is Justin Trudeau standing alone in the world stage and already losing the plot?

தனித்து விடப்படும் கனடா: இந்த விவகாரத்தில்தான் தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனித்து விடப்படுவதாக உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டிற்கு பின் அந்த நாடு மேற்கொண்ட உளவு தகவல்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கனடாவிற்கு உளவு ரீதியாக "ஒரு நாடு" உதவி செய்ததாக கூறப்படுகிறது. மனித உளவு மற்றும் சிக்னல் மூலம் மேற்கொள்ளப்பட்ட உளவு வழியாகவே இந்த குற்றச்சாட்டை கனடா வைப்பதாக கூறப்படுகிறது.

அதாவது மனிதர்கள் வழியாக வழங்கப்பட்ட உளவு தகவல், சில சிக்னல்கள் மூலம் கண்டறியப்பட்ட உளவு தகவல்கள் வழியாக இந்த தகவல்களை கண்டறிந்ததாக கனடா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிக்னல் என்றால் போன் பரிமாற்றம், மெயில் பரிமாற்றம், போனை ஒட்டுகேப்பது போன்ற உளவு பணிகள்.ஆகும் அதேபோல் கனடாவிற்கு நெருக்கமாக இருக்கும் Five Eyes intelligence குழுவை சேர்ந்த வேறு ஒரு நாடும் தனது உளவு தகவலை கனடாவிற்கு வழங்கி உள்ளதாம்.

என்னதான் உளவு தகவல்கள் கொடுக்கப்பட்டாலும் கூட கனடாவை அரசியல் ரீதியாக எந்த நாடும் ஆதரிக்கவில்லை. உதாரணமாக ஐந்து கண்கள் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இந்த கூட்டணி விசாரணைக்கு உதவுகிறது.

அதேபோல் விசாரணை நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதில் இந்தியாவை நேரடியாக குற்றஞ்சாட்ட அந்த நாடுகள் தயாராக இல்லை. இந்தியாவிற்கு எதிராக கூட்டு அறிக்கை கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுத்துள்ளது. அதோடு கனடா இதில் குற்றச்சாட்டு வைத்தாலும் ஆதாரம் எதையும் கொடுக்கவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் என்னதான் அமெரிக்கா கனடாவிற்கு நெருக்கமாக இருந்தாலும்.. நேரடியாக அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அமெரிக்கா பல வெளிநாட்டு தலைவர்களை கொன்ற போது அமெரிக்காவிற்கு வந்த கண்டனம் கூட இந்தியாவிற்கு இதுவரை வரவில்லை.

எந்த நாடும் கனடாவிற்கு இது வரை முழுமையான ஆதரவை கொடுப்பதாக அறிவிக்கவில்லை. கனடாவின் தெற்கு அண்டை நாடான அமெரிக்கா கிட்டத்தட்ட இந்த விவகாரத்தில் காது கேளாத நாட்டை போலவும்.. பேசவே முடியாத அளவிற்கு மௌன விரதம் இருப்பது போலவும் நடந்து கொண்டு வருகிறது இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகள், ஆனால் கனடாவின் சார்பாக அமெரிக்கா இதுவரை இந்தியாவிற்கு எதிராக கோபத்துடன் பேசவில்லை.

சீனாவோ, ரஷ்யாவோ இதை செய்திருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். ராஜாங்க ரீதியா நாங்கள் கவலை கொள்கிறோம்.. விசாரிக்க வேண்டும்.. விசாரணை முக்கியம் என்றெல்லாம் உலக நாடுகள் பேசுகிறதே ஒழிய நேரடியாக கனடாவிற்கு இதுவரை எந்த நாடு சப்போர்ட் செய்யவில்லை.

Canada vs India issue: Is Justin Trudeau standing alone in the world stage and already losing the plot?

ஆனால் இன்னொரு பக்கம் இந்தியாவோ சவுத் ரைசிங் கூட்டம் தொடங்கி பல கூட்டங்களில் அடுத்தடுத்து வலிமையாக கனடாவிற்கு எதிராகவும், மேற்கு உலக நாடுகளுக்கு எதிராகவும் பேசி வருகிறது. சமீபத்தில் கூட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சில நாடுகள் பேச்சு உரிமையை, பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு நிறைய விஷயங்களை (காலிஸ்தானி போராட்டம் என்பது அவர்கள் சுதந்திரம், அவர்கள் செயல்பட சுதந்திரம் தர வேண்டும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ சொன்னதை சுட்டிக்காட்டி பேசி உள்ளார்) செய்கிறார்கள். அதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

அதோடு ஏற்கனவே வளர்ந்த நாடுகள், தங்களிடம் பவர் உள்ள நாடுகள், ஆசிய நாடுகள் வளர்வதை விரும்பவில்லை. உலக ஆர்டர் மாறுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உலக நலனுக்கு என்று நிறைய விஷயங்களை பேசுவார்கள். ஆனாலும் தொடர்ந்து பல்வேறு உலக விஷயங்களில் அவர்களின் நிலைப்பாடு இரட்டை நிலைபாடாகவே இருக்கும்.

மேற்கு உலக நாடுகள் பல விஷயங்களில் இரட்டை நிலைப்பாட்டையே எடுக்கிறது என்று அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விமர்சனம் செய்து பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சை கனடா, அமெரிக்கா கண்டிப்பக்க எதிர்பார்த்து இருக்காது. ஒரு பக்கம் கனடா இதில் ஓரம்கட்டப்பட இந்தியா தைரியமாக திமிறி எழுந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+