டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமறைவு ஆயுத பேர வியாபாரி மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு.. பிரியங்கா கணவருக்கு சிக்கல்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் 2009ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தப்பி ஓடிய ஆயுத பேர வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேராவுக்கும் தொடர்பு இருப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது.

CBI has filed case against arms dealer Bhandari involving rs. 6477 crore scam

இந்த ஊழலில் கிடைத்த ரூ. 6,744 கோடியை வைத்துதான் லண்டன், பிரின்ஸ்டன் ஸ்கொயரில் 1.9 மில்லியன் மதிப்பிலான சொத்து வாங்கியதாகவும் வழக்கில் பதியப்பட்டுள்ளது. இந்த சொத்து ராபர்ட் வதேராவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் ராபர்ட் வதேராவின் பெயரை சிபிஐ குறிப்பிடப்படவில்லை. ஆனால், தொடர்ந்து இந்த சொத்து ராபர்ட் வதேராவுக்கு சொந்தமானது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகிறது.

லண்டனில் இருக்கும் இந்த சொத்தை 2009, ஆகஸ்ட் மாதத்தில் அல்லது அதற்கு முன்னதாக வாங்கி இருக்க வேண்டும். ஜூன் 13, 2009ல், துபாயில் இருக்கும் பண்டாரியின் சான்டெக் இண்டர்நேஷனல் FZC என்ற நிறுவனத்துக்கு சாம்சங் இஞ்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் ரூ. 22 கோடியை மாற்றம் செய்துள்ளது. இதற்குப் பின்னரே லண்டனில் இருக்கும் சொத்தை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவி வந்த வி.பி. துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி.. முருகன் உத்தரவுதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவி வந்த வி.பி. துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி.. முருகன் உத்தரவு

குஜராத்தில் இருக்கும் தஹெஜ் என்ற இடத்தில் பெரிய அளவிலான தனது திட்டத்திற்கு ஜெர்மன் மற்றும் தென்கொரியா நிறுவனங்களுடன் ஓஎன்ஜிசி ரூ. 6,744.32 கோடி அளவிற்கு, பிப்ரவரி, 2009ல் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை சிபிஐ இந்த ஊழல் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்தது. இதில் தென்கொரியாவின் எஸ்இசிஎல் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி, பிரிட்டனின் ஃபோஸ்டர் வீலர் எனர்ஜி லிமிடெட் மற்றும் பெயர் குறிப்பிடாத ஓஎன்ஜிசி அதிகாரிகள், OPaL அதிகாரிகள் மற்றும் சஞ்சய் பண்டாரியின் பெயர்களை பதிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையும் பண்டாரியின் மீது எப்ஐஆர் பதிவு செய்தது. இது மட்டுமின்றி கடந்த 2009ல், இந்திய விமானப் படைக்கு விமானங்கள் வாங்கியதிலும் ரூ. 2,895 கோடிக்கு ஊழல் நடந்ததாக பண்டாரியின் மீது சிபியி வழக்குப் பதிவு செய்துள்ளது. நேபாளம் வழியாக லண்டனுக்கு பண்டாரி இதற்குப் பின்னர் தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை. இன்னும் சர்வதேச போலீஸ் முன்பு நிலுவையில் இருக்கிறது.

லண்டனில் தான் வாங்கிய சொத்துக்களை சில ஆண்டுகளில் ஸ்கைலைட் இன்வெஸ்ட்மென்ட் FZE நிறுவனத்துக்கு பண்டாரி விற்றுள்ளார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த தம்பி என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது. இவர் வேறு யாருமில்லை ராபர்ட் வதேராவின் கூட்டாளி என்று சிபிஐ குற்றம்சாட்டி இருந்தது. கடந்த ஜனவரி மாதம் தம்பியை சிபிஐ கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த எப்ஐஆரில் ராபர்ட் வதேரா பெயர் இல்லை என்றாலும், அவருடன் தொடர்புடையாதாகவே கூறப்பட்டுள்ளது.

English summary
The CBI has filed a case against fugitive arms dealer Sanjay Bhandari in ONGC a deal worth Rs 6,744 crore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X