CBSE பிளஸ் 2 தேர்வுகள் அதிரடி ரத்து.. சவுதி உள்பட 7 மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒத்திவைப்பு
டெல்லி: ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவற்றில் நாளை (மார்ச் 16) தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சிபிஎஸ்இ சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடாக ஈரான் உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா , ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் மொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்மேகங்களால் சூழப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக நம் நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களின் குழந்தைகளை அங்கேயே படிக்க வைத்து வருகின்றனர்.
இந்த மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தியாவை சேர்ந்த பல மாணவ-மாணவிகள் இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர். தற்போதைய போரால் இந்த பள்ளிகளில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டன. அதேவேளையில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது அந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளி்ல் சிபிஎஸ் சார்பில் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Important Update on CBSE Class XII Exams in Middle East Countries
— CBSE HQ (@cbseindia29) March 15, 2026
CBSE has issued Circular -6 regarding cancellation of Board Exams of Class XII in Middle East countries
See attachment for further details pic.twitter.com/FfZc5vKMHT
பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றுமு் தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இதனால் பஹ்ரைன், குவைத், ஓமன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிபிஎஸ்இ மாணவ-மாணவிகள் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பது நல்லது. மேலும் புதிய அப்டேட்டுகளை சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்கள் வழியாக மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.
-
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே -
வளைகுடாவில் மூக்கை நுழைக்கும் ஷெரீப்.. சவுதி பாகிஸ்தான் டீல் என்ன! உலக போர் வெடிக்கும் ஆபத்து -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications