டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோதனைக்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்துங்கள்.. பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நிபுணர்குழு வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் பெறுவதற்கு தன்னார்வலர்களை அதிகரிக்க வேண்டும் என்றும் இடைக்கால செயல்திறன் பகுப்பாய்வு நடத்த வேண்டும் என்றும் நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் மருந்து தர கட்டுப்பாட்டு நிபுணர் குழு நேற்று ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கோவிஷீல்டிற்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கு பரிந்துரைத்தது. இந்த மருந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது, இதன் மூலம் நாட்டில் முதல் கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு அடுத்த சில நாட்களில் வழிகள் உருவாகி உள்ளது.

CDSCO panel asks Bharat Biotech to expedite volunteer recruitment

அதேநேரம் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) மருந்து குறித்து நிபுணர் குழு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை பெறுவதை கருத்தில் கொண்டு, மருத்துவ சோதனைக்கு தன்னார்வலர்களை சேர்ப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும் கோவாக்சினுக்கு இடைக்கால செயல்திறன் பகுப்பாய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதேநேரம் ஆக்ஸ்போர்டு COVID-19 தடுப்பூசிக்கு தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கும்போது, ​​குழு சில ஒழுங்குமுறை விதிகளை விதித்தது, இதன்படி 18 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டு முறை மருந்துகளை அளிக்க வேண்டும என்று கூறியுள்ளது.

நாட்டில் 30 கோடி மக்களுக்கான தடுப்பூசி செலவை மட்டுமே அரசு ஏற்கும்.. கொரோனா தடுப்பு குழு தலைவர்!நாட்டில் 30 கோடி மக்களுக்கான தடுப்பூசி செலவை மட்டுமே அரசு ஏற்கும்.. கொரோனா தடுப்பு குழு தலைவர்!

மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிலும் உலகெங்கிலும் நடந்து வரும் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் தரவை விரைவாக மதிப்பாய்வு செய்ய சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், இந்நிறுவனம் நோய்த்தடுப்பு (AEFI) மற்றும் பக்க விளைவுகள் (AESI) தொடர்பான தரவுகளை இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை, சரியான மாதாந்திர பகுப்பாய்வை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

English summary
Bharat Biotech''s vaccine, official sources said, the Subject Expert Committee (SEC) on COVID-19 of the Central Drugs Standard Control Organisation (CDSCO) asked the firm to expedite volunteer recruitment for the ongoing clinical trial and recommended it may conduct interim efficacy analysis for further consideration of restricted emergency use approval for Covaxin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X