போதும் இத்தோடு நிறுத்திக்கலாம்..மத்தியில் இருந்து வந்த சிக்னல்.. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எண்ட்கேம்
டெல்லி : இந்தியாவில் கடந்த 4 வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை திருத்தவோ அல்லது கைவிடுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது.
கடந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.

கொரோனா 3வது அலை
தற்போது 3வது அலை இந்தியாவில் உள்ள நிலையில், ஜனவரியில் தினசரி பாதிப்பு உச்சம் தொட்டது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போதிலும் கடந்த அலைகளைப் போல முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை. தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
கடந்த வாரத்தில் தினசரி சராசரி வழக்குகள் 50,476 ஆகவும், கடந்த 24 மணி நேரத்தில் 27,409 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தினசரி வழக்கு நேர்மறை விகிதம் புதன்கிழமை 3.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் உலகளாவிய ரீதியிலும் இந்தியாவிலும் வைரஸின் பரவல் மற்றும் சுழற்சியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய வழிகாட்டுதல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சுகாதார அமைச்சகம் பிப்ரவரி 10 ஆம் தேதி சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்களை திருத்தியது

கட்டுப்பாடுகளில் தளர்வு
நாடு முழுவதும் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் குறைந்து வருவதால், புதிய வழக்குகளின் போக்கு மற்றும் அவர்களின் பிராந்தியங்களில் நேர்மறை விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்ய, மாற்ற அல்லது கைவிடுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய கேட்டுக் கொண்டுள்ளது. புதன்கிழமையன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தடைபடக் கூடாது
அந்த கடிதத்தில், "இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஜனவரி 21 முதல் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், முந்தைய மாதங்களில், வழக்குகள் அதிகரித்து வருவதால், சில மாநிலங்கள் தங்கள் எல்லைகள் மற்றும் விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன எனவும், கொரோனா பாதிப்பை பொறுத்து பொது சுகாதார சவாலை திறம்பட நிர்வகிக்கும் அதே வேளையில், மாநில அளவிலான நுழைவு புள்ளிகளில் விதிக்கப்படும் கூடுதல் கட்டுப்பாடுகளால் மக்களின் நடமாட்டம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தடைபடக்கூடாது என்பது முக்கியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications