முடிந்தது தேர்தல்.. தொடரும் போர்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்.!
டெல்லி : உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது.
கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கும் கீழ் ஆகவே இருந்து வந்தது. போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் 110 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெயின் விலை அடுத்தநாளே 118 டாலராக அதிகரித்தது.

பெட்ரோல் டீசல் விலை
சுமார் 13 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 139.19 டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 10721.94 ரூபாயாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை உள்ளது. உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என யூகங்கள் கிளம்பி உள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்ய அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் காரணமாக இன்று ஒரே நாளில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரை உயர்ந்தது. இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என கூறப்பட்டு வரும் நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

மக்கள் நலன் முக்கியம்
இதுகுறித்து பேசிய அவர், கச்சா எண்ணையின் விலை அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும் போர் சூழல் நிலவுவதால் கச்சாஎண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் அதனை கருத்தில் கொண்டு விலையை நிர்ணயிக்கும் எனவும் மக்களின் நலன் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார் மேலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் என்பது தவறானது என்றும், தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது என்று கூறுவது சரியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications