முதல் அலையை விட அதிக பாதிப்பு.. இந்த 6 மாநிலங்களில் நிலைமை மிக மோசம்.. மத்திய அரசு கவலை!
டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் வந்த நாளில் இருந்து கொரோனா வைரஸ் இந்தியாவில் றெக்கை கட்டி பறந்து வருகிறது.
தலைநகர் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

முதல் அலையை விட மோசம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,17,532 புதிய பாதிப்புகள் ஏற்பட்டன. 380 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 19,24,051 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. நாட்டின் தற்போதைய நிலை கொரோனா முதல் அலையை விட மோசமாக உள்ளது நிலைமை இப்படி இருக்க டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கவலைக்கிடமான பட்டியலில் உள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர்
தற்போதைய கொரோனா நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ''மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உ.பி., குஜராத், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகியவை கொரோனா பாதிப்பு அடிப்படையில் முதல் 10 மாநிலங்களில் உள்ளன'' என்று தெரிவித்தார்.

இந்த 6 மாநிலங்கள்
டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கவலைக்கிடமான நிலையில் உள்ளன என்று பேசிய அவர் இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுக்களை அனுப்பி, தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார். இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து கூர்மையான எழுச்சி காணப்படுகிறது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
Recommended Video

.தடுப்பூசியின் நன்மை
தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், ' இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் விகிதம் 72% ஆகும். இதுவரை நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட 52% குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் நன்மை பயக்கும். தடுப்பூசிகள் காரணமாக இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.கொரோனாவின் 3-வது அலையில் அதிக தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அறிவியல் சான்றுகள் உருவாகும்போது, தடுப்பூசியின் கவரேஜை விரிவுபடுத்துவோம். அறிவியல் தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்போம்' என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications