மத்திய அரசு திடீர் முடிவு- பெட்ரோல் விலை ரூ10 குறைப்பு? டீசல் விலை ரூ6 குறைப்பு? இன்று அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ10 குறைக்கவும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ6 குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கடந்த 592 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் டீசல் ரூ94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Centre to announce Petrol, Diesel price cut to by Rs.10 today?

கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ10 குறைக்கவும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ6 குறைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+