பிபின் ராவத் மறைவு- அடுத்த 10 நாட்களுக்குள் புதிய முப்படை தலைமை தளபதி நியமனம்!
டெல்லி: நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவ்த் தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதி அடுத்த 10 நாட்களுக்குள் நியமிக்கப்பட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 அதிகாரிகளுடன் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே மலைமுகட்டில் மரத்தின் மோதி கீழே விழுந்து நொறுங்கியது.

பிபின் ராவத் உயிரிழப்பு
இவ்விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத்தின் உடல் நாளை டெல்லியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஆலோசனை
இதனிடையே நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்பட உள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின நாளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

புதிய தளபதி யார்?
ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத், நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ராணுவ, விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிற வகையில் முப்படைகளின் தலைமை தளபதி உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் தற்போதைய ராணுவ தளபதிகளில் ஒருவர் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இன்று ராஜ்நாத்சிங் விளக்கம்
இந்நிலையில் பிபின் ராவத் உயிரிழப்பு தொடர்பாக இன்று லோக்சபாவில் காலை 11.15 மணிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ராஜ்யசபாவிலும் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பிபின் ராவத் மறைவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications