Champions Trophy: இந்தியா கப் அடிக்கனும்..வட இந்தியாவில் கிரிக்கெட் ஜூரம்- ஜெகஜோராக பிரார்த்தனைகள்!
டெல்லி: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்று வட இந்தியாவின் பல பகுதிகளில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பு.
நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இன்றைய போட்டியை காண்பதற்கு தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணி, வெல்ல வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.
ஆரத்தி வழிபாடு

உ.பி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், சாரங் நாத் மகாதேவ் ஆலயத்தில் இந்தியாவின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆரத்தி வழிபாடு நடத்தினர்.
வீரர்கள் படத்தை வைத்து யாகம்

உ.பி, கான்பூரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராதா மகாதேவ் கோவிலில், வீரர்களின் போட்டோக்களை வைத்து யாகம் நடத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருநங்கைகள் யாகம்

உபி. பிரக்யாக்ராஜில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக திருநங்கைகள் ஒருங்கிணைந்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்; இந்த யாகத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் படங்களை வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.
முகமது ஷமி உறவினர்கள் சிறப்பு தொழுகை

உபி, மொரதாபாத்தில், இந்திய அணி வீரர் முகம்மது ஷமியின் உற்வினர்கள், இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்
அயோத்தியில் யாகம்

உ.பி, அயோத்தியில் இந்திய அணியின் வெற்றிக்காக சாதுக்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகளை செய்தனர்.
பீகார் பாட்னாவில் சிறப்பு யாகம்
பீகார், பாட்னாவில் இந்திய அணியின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
சிறப்பு ஏற்பாடுகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான இறுதிப் போட்டியை காண்பதற்காக விளையாட்டு மைதாங்களில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கடற்கரை பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாநகராட்சி மைதானத்திலும் இத்தகைய பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டிருக்கிறது.
மும்பை விநாயகர் கோவிலில் பூஜைகள்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சிவாஜி பூங்கா விநாயகர் கோவிலில் இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
லக்னோவில் சிறப்பு பூஜை

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக யாக பூஜை நடத்தினர்.
கொல்கத்தாவில் சிறப்பு வழிபாடு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் இந்திய அணியின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜைகள் நடத்தினர்.
ரிஷிகேஷில்..

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் யோகா மகோத்சவ் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் இந்திய அணியின் வெற்றிக்காக வழிபாடு நடைபெற்றது.
சண்டிகரில்..

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல வேண்டும் என பிரார்த்தனை நடத்தினர் சண்டிகர் ரசிகர்கள்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications