டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர்''.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: 90-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் மோடி, 'இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகார் விமான நிலையத்துக்கு ஷாகீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படும்' என பேசினார்.

நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். மன் கி பாத் (மனதின் குரல்) என்ற பெயரிலான இந்த வானொலி உரையில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார்.

Chandigarh Airport is named after Bhagatsingh: Prime Minister Modi in the Voice of Mind program

கொரொனா காலங்களில் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அவரது பேச்ச்சுக்கள் இருந்தது. இப்படி ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பிரதமரின் உரை நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார். இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் மோடியின் 93-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு செப்-28ஆம் தேதியை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகார் விமான நிலையம் ஷாகீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

புதிய இந்தியாவை நோக்கி நாம் அனைவரும் முன்னேறி வரும் போது சுதந்திரத்துக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களை நினைவில் கொள்ளவேண்டும்.இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீட்டாக்களுக்கு நாட்டு மக்கள் பெயர்களை பரிந்துரைக்கலாம்.

ராசாவின் பேச்சை திரித்து வெளியிடுவதா?.. பாஜகவின் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது.. கி. வீரமணிராசாவின் பேச்சை திரித்து வெளியிடுவதா?.. பாஜகவின் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது.. கி. வீரமணி

மனிதர்களுடைய வாழ்க்கை முன்னேற்ற்ம் எப்பொழுதும் நீரோடு இணைந்து இருக்கிறது. குளம் குட்டையாக இருக்கட்டும் நதிகளாக இருக்கட்டும். இந்தியாவில் கடற்கரை பகுதிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பல பகுதிகளில் இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. நதிக்கரையோரம் கடற்கரையோரம் இருக்கும் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் உன்னதமானது.

கடற்கரை மற்றும் நதிக்கரையோரம் உள்ள பல இடங்கள் சுற்றுலாத்துறையோடு இணைந்து பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கிறது. ஆனால் சில பகுதிகளில் இதனால் பாதிப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள நாம் தயராக இருக்க வேண்டும். சவால்களை எதிர்க்க தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும். கடற்கரை பகுதிகளை சுத்தபப்டுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

English summary
Speaking at the 90th Voice of Mind programme, Indian Prime Minister Modi said that Chandigarh Airport will be renamed as Shaheed Bhagat Singh Airport in honor of the birth anniversary of Indian freedom fighter Bhagat Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X