சந்திரயான் -3: சர்வதேச விண்வெளித்துறையில் இந்திய பங்களிப்பை அதிகரிக்கும்: ஜிதேந்திர சிங் நம்பிக்கை
டெல்லி: சந்திரயான் -3 விண்கலம் விண்வெளித்துறையில் இந்தியாவின் சர்வதேச அளவிலான பங்களிப்புகளை அதிகரிக்கும் என்று மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
சந்திரயான் -3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிற்பகல் சந்திரயான் -3 விண்ணில் செலுத்தப்படுகிறது. இதனை ஒட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டின் போது சந்திரயான் -3 உருவ மாதிரியை வைத்தும் வழிபாடு நடத்தினர்.

இதனிடையே மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டியும் இணைந்து "சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம்: குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் செயற்கை நுண்ணறிவு" என்ற தலைப்பிலான கூட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இந்திய- அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் (ஐயுஎஸ்எஸ்டி.எஃப்) மற்றும் அமெரிக்க இந்திய தொழில்நுட்ப மன்ற அறக்கட்டளைச் செயலகம் (யுஎஸ்ஐஎஸ்டிஇஎஃப்) இணைந்து இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளன.
இந்தத் திட்ட அழைப்பு ஆகஸ்ட் 31, 2023 வரை அமலில் இருக்கும். இந்திய-அமெரிக்க கூட்டு முன்முயற்சிகளுக்கு இதில் ஊக்கமளிக்கப்படும். இதில் வணிக ரீதியாக சாத்தியமான மற்றும் சமூக ரீதியான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் முன்மொழிவுகள் ஊக்குவிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், விண்வெளிக்கு மனிதப் பயணம் மேற்கொள்வதில் ஒத்துழைப்புக்கான உத்திசார் கட்டமைப்பை அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து உருவாக்கி வருவதாகக் கூறினார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியா, ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
இருதரப்பிலும் ஒரு புதிய அத்தியாயத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் உருவாக்கி இருப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் கூட்டு செயல்பாடு மற்றும் வணிகமயமாக்கலுக்காக அமெரிக்க-இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதியத்தின் (யுஎஸ்ஐஎஸ்டிஇஎஃப்) கீழ் 20 லட்சம் டாலர் மானியத் திட்டம் தொடங்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வரவேற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.
குவாண்டம் தொழில்நுட்பத்தில் துடிப்பான மற்றும் புதுமையான அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தேசிய குவாண்டம் இயக்கத்துக்கு (என்க்யூஎம்) இந்தியா அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் திறனை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டுள்ளதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நமது அன்றாட வாழ்க்கையில் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் சந்திரயான் -3 விண்கலம் விண்வெளித்துறையில் இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்புகளை அதிகரிக்கும்; அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) தொடர்பான துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications