டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை நிறுவன சொட்டு மருந்திற்கு அமெரிக்காவில் தடை! ஒருவர் பலி.. பலருக்கும் பார்வை பறிபோனதாக புகார்

இந்திய கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய அமெரிக்கர் உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவில் இந்திய கம் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியவர் உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட அந்த தனியார் மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உலகிலேயே அதிகப்படியான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான மருந்துகள் இந்தியாவில் இருந்து தான் அனுப்பப்படுகிறது.

குறைந்த விலையில் அதிகப்படியான மருந்துகளை மிகத் திறமையாக இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்வதே இதற்கான காரணமாக உள்ளது. இருப்பினும், சில காலமாக இந்திய மருந்து நிறுவனங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் சர்வதேச அளவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

 கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடலாமா! தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லிகள்? சிசுவின் உயிருக்கே ஆபத்து கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடலாமா! தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லிகள்? சிசுவின் உயிருக்கே ஆபத்து

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதனிடையே இந்திய மருந்து நிறுவனத்தின் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியவர் அமெரிக்காவில் உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய நபருக்கு நிரந்தர பார்வை இழப்பும் மரணமும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. சொட்டு மருந்துகளில் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்று அந்நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை சேர்ந்த நிறுவனம்

சென்னை சேர்ந்த நிறுவனம்

இதையடுத்து சென்னையைச் சேர்ந்த அந்த நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் இருந்து தனது கண் சொட்டு மருந்துகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழ்நாடு தலைநகர் சென்னைக்கு அருகே அமைந்துள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்திற்குச் சொந்தமான மருந்தின் மீது தான் இந்த புகார்கள் முன்வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மையம் குளோபல் பார்மா நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத புதிய சொட்டு மருந்துகளை இப்போது ஆய்வு செய்து வருகிறது.

பார்வை இழப்பு

பார்வை இழப்பு

அதேபோல குளோபல் பார்மா மருந்துகளை இறக்குமதி செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குளோபல் பார்மாவின் எஸ்ரிகேர் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்திய 5 பேர் பார்வை இழந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தற்போது இந்த சொட்டு மருந்து குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதால் இதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அந்நாட்டு மருந்து அமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அங்குள்ள மருத்துவர்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

சொட்டு மருந்துகளில் பாக்டீரியாவால் மாசு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தனது அனைத்து எஸ்ரிகேர் சொட்டு மருந்துகளையும் திரும்பப் பெறுவதாக குளோபல் பார்மா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான இருமல் மருந்துகளைப் பயன்படுத்தியதில் சிலர் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதிரடி ஆய்வு

அதிரடி ஆய்வு

சொட்டு மருந்துகளில் பாக்டீரியாவால் மாசு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தனது அனைத்து எஸ்ரிகேர் சொட்டு மருந்துகளையும் திரும்பப் பெறுவதாக குளோபல் பார்மா அறிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அந்த மருந்து நிறுவனம் மீது அமெரிக்கா புகார் எழுப்பிய நிலையில், தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாதிரிகள் சேகரிப்பு

மாதிரிகள் சேகரிப்பு

நேற்றிரவு தொடங்கிய இந்த ஆய்வு அதிகாலை 2 மணி வரை சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆலையில் மருந்து உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாகத் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் டாக்டர் விஜயலட்சுமி கூறுகையில், "அமெரிக்காவுக்கு அவர்கள் அனுப்பிய மருந்தைத் தவிர வேறு சில மருந்துகளில் இருந்து மாதிரிகளை எடுத்துள்ளோம். முதற்கட்ட விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உரிமம் உள்ளதா

உரிமம் உள்ளதா

இந்த மருந்து நிறுவனத்திடம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முறையான உரிமம் உள்ளது. ஓபன் செய்யப்படாத மருந்துகளை அமெரிக்க அதிகாரிகள் அப்போது சோதனை செய்துள்ளன. அதன் முடிவுகள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான இருமல் மருந்துகளைப் பயன்படுத்தியதில் சிலர் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

English summary
Chennai based pharma company's Eye Drops Linked To Death In US: Indian pharma company US death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X