இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு.. நாட்டின் தூய்மையான மாநிலம் எது தெரியுமா?.. இதோ லிஸ்ட்
டெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் தூய்மையான மாநிலங்கள் மற்றும் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் 2021-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த தூய்மையான மாநிலம், நகரத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகரான இந்தூர் நகரம் 'இந்தியாவின் சிறந்த நகரம்' என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தூர் தொடர்ந்து 5-வது முறையாக சிறந்த தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் முதல் இடம்
'தூய்மையான நகரம்' பிரிவில் இரண்டாவது இடத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரும், ஆந்திர மாநிலம் விஜயவாடா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு மூன்றாவது இடம் பெற்ற நவி மும்பை தற்போது ஒரு இடம் சறுக்கி 4-வது இடம் பெற்றுள்ளது. மாநிலங்கள் வரிசையில் 'இந்தியாவின் சிறந்த மாநிலம்' என்ற பட்டத்தை சத்தீஸ்கர் மாநிலம் பெற்றுள்ளது.

2-வது இடம் யாருக்கு?
இந்த பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் 2-வது இடத்தையும், மத்தியப் பிரதேச மாநிலம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. 100-க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் பிரிவில், ஜார்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியானா மற்றும் கோவா இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தூரின் ஆதிக்கம்
இந்தூர், சூரத், விஜயவாடா, நவி மும்பை, புது தில்லி, அம்பிகாபூர், திருப்பதி, புனே, நொய்டா மற்றும் உஜ்ஜைன் ஆகிய நகரங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன. இதே பிரிவில் உள்ள 25 நகரங்களில் லக்னோ மிகக் குறைந்த தரவரிசையில் உள்ளது. மகாராஷ்டிராவின் விட்டா நகரம் 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து லோனாவாலா மற்றும் சாஸ்வாட் உள்ளன.

மாவட்ட தரவரிசைப்பிரிவு
1-3 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாட்டின் தூய்மையான சிறிய நகரப் பிரிவில் புது டெல்லி மாநகராட்சி முதல் இடத்தைப் பிடித்தது. கன்டோன்மென்ட் போர்டுகளின் பிரிவில், அகமதாபாத் தூய்மையான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து மீரட் மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன. மாவட்ட தரவரிசைப்பிரிவில் சூரத் முதல் விருதைப் பெற்றுள்ளது, இந்தூர் மற்றும் புது தில்லி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.

தமிழ்நாடு எங்கே?
பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி, "தூய்மையான கங்கை நகரம்" என தேர்ந்தெடுக்கப்பட்டது, பீகாரின் முங்கர் மற்றும் பாட்னா ஆகியவை இந்த பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. 28 நாட்களில் 4,320 நகரங்களில் இந்த தூய்மைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 4.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பட்டியல் எதிலும் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்து.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications