டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 3வது அலையில் குழந்தைகளுக்கே அதிக ஆபத்து ஏன்? இனி என்ன செய்ய வேண்டும்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா 3வது அலை உருவானால் குழந்தைகளுக்கே அதிக ஆபத்து இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு ஏன் அதிக ஆபத்து, அவர்களை ஆபத்தில் இருந்து காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள விளக்கம் அளித்துள்ளனர்.

Recommended Video

    India-வில் Covid-19 3rd Wave க்கு இப்போதே தயாராக வேண்டும் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உலகில் எந்த நாட்டிலும் நிகழாத மோசமான பாதிப்பு இந்தியாவில் நாள்தோறும் ஏற்பட்டு வருகிறது. தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் மிக அதிகமாக உள்ளது.

    பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து! பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து!

    இந்நிலையில் கொரோனா முதல் அலையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கவில்லை. 2வது அலையில் உருமாற்ற வைரஸ்கள் பரவி வருகிறது. இவை இளம் வயதினரையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்க தொடங்கி உள்ளது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிராவின் அகோலா, அமராவதி என்ற இரண்டு மாவட்டங்களில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்துள்து. இவ்விரு மாவட்டத்திலும் 6,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 408 பேர் குழந்தைகள். இது கொரோனா வைரஸின் அபாயத்தை உணர்த்தும் எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்

    குழந்தைகளை பாதிக்கும்

    குழந்தைகளை பாதிக்கும்

    கொரோனா 3வது அலை ஏற்பட்டால், அதில் அதிக ஆபத்தை எதிர்கொள்ளப் போகிறவர்கள் குழந்தைகள்தான் என மருத்துவ விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். அதன்படி இப்போது பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. குழந்தைகள் நல டாக்டர் கமல் கிஷோர் டோலே இது பற்றி கூறுகையில், ''இன்னும் சில மாதத்தில் கொரோனா 3வது அலை தாக்க வாய்ப்பு உள்ளது. அதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும்.. குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த இரட்டை உருமாற்ற வைரஸ் போன்றவை மிகுந்த வீரியமிக்கவை. அவை குழந்தைகளையும் எளிதாக தாக்கும். எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும்'' என்றார்

    2வது அலை அலட்சியம்

    2வது அலை அலட்சியம்

    கர்நாடக அரசின் கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினரான வைராலஜிஸ்ட் டாக்டர் ரவி கூறுகையில், ''குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய போதுமான மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. குழந்தைகள் கொரோனா வார்டுகள் இல்லை. அவர்களுக்கு பிரத்யேக ஐசியு மருத்துவ வசதிகள் இல்லை. இதையெல்லாம் உடனடியாக செய்தாக வேண்டும், கொரோனா முதல் அலையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. ஆனால், 2வது அலை தொடக்கத்தில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் அதை அரசு அலட்சியம் செய்தது. அதன் விளைவுதான் இவ்வளவு பயங்கரமாக உள்ளது. எனவே அறிவியல் பூர்வமாக, தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது'' இவ்வாறு கூறினார்.

    ஆனால் வாய்ப்பு இல்லை

    ஆனால் வாய்ப்பு இல்லை

    இதற்கு என்ன தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ''குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதே இதற்கு ஒரே தீர்வு. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான் உருமாற்ற வைரஸ்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்கிறார்கள். ஆனால் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் 45 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது கடினமாக உள்ளது.. இந்தநிலையில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசு எந்த ஆலோசனையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

    English summary
    Doctors have warned that children are at higher risk if the corona 3rd wave develops. Doctors have explained why children are at greater risk from the third wave of corona and what can be done to protect them from danger.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X