டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாங்காங் பகுதியில் மலைகளை ஆக்கிரமித்த சீனா.. இந்திய ரோந்து பணிக்கும் இடையூறு.. அச்சத்தில் மக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் பாங்காங் சோ ஏரி பகுதியில் உள்ள பெரிய பெரிய மலைகளை எல்லாம் சீன ராணுவத்தினர் ஆக்கிரமித்ததாக தெரிகிறது.

Recommended Video

    Pangong Tso பகுதியில் மலைகளை ஆக்கிரமித்த China

    லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீன ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

    இந்த நிலையில் லடாக் எல்லையில் உள்ள பாங்காங் சோ ஏரி பகுதியில் உள்ள பெரிய பெரிய மலைகளை சீன ராணுவம் ஆக்கிரமித்ததாக தெரிகிறது. அது போல் இந்திய ராணுவத்தினரின் ரோந்து பணிக்கும் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லடாக் மலை வளர்ச்சி கவுன்சிலின் பிரதிநிதி தாஷி நம்கியால் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

    லடாக் எல்லையில் பாலம் கட்டும் பணி.. கால்வன் ஆற்றில் மூழ்கி இந்திய வீரர்கள் 2 பேர் மரணம் லடாக் எல்லையில் பாலம் கட்டும் பணி.. கால்வன் ஆற்றில் மூழ்கி இந்திய வீரர்கள் 2 பேர் மரணம்

    எல்லை பகுதிகள்

    எல்லை பகுதிகள்

    அதில் அவர் கூறுகையில் இத்தனை ஆண்டுகளில் எல்லை பகுதிகளில் இது போன்ற ஒரு ராணுவ நடமாட்ட அதிகரிப்பை மக்கள் யாரும் கண்டதில்லை. மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். எல்லையில் இது போல் படைகள் குவிக்கப்படுவது இதுவே முதல் முறை. எல்லையில் பதற்றம் நிலவி வந்தாலும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய ராணுவம் மேம்படுத்தி வருகிறது.

    இந்திய ராணுவம்

    இந்திய ராணுவம்

    துர்புக், ஷியாக், கால்வன், தவுலத் பேக் ஓல்டி ஆகிய பகுதிகளில் நடப்பது குறித்து ஒரு சிலர் எங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். சீனா கடுங்கோபத்தில் இருந்தாலும் பாலம் கட்டுவதையும் சாலைகள் போடுவதையும் இந்திய ராணுவம் நிறுத்திவைக்கவில்லை.

    அஞ்சும் நிலை

    அஞ்சும் நிலை

    மேற்கண்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது கிராமத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிகளில் வசிப்பதற்கே அஞ்சுவதாக தெரிவித்தார்கள்.

    சீன அத்துமீறல்

    சீன அத்துமீறல்

    சீன ராணுவத்தினர் பிங்கர் 4 பகுதிக்கு வந்தது முதல் அங்குள்ள பெரிய குன்றுகளை ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் பாங்காங் ஏரி பகுதியில் படகு இயக்கமும் நடைபெறுவதாக கூறுகிறார்கள். சீனா அத்துமீறுவதும் ஊடுருவுவதும் இது முதல் முறையல்ல. ஓரிரு பகுதிகளில் மட்டும் பதற்றமான சூழலோ தடையோ இல்லை. கிழக்கு லடாக் முழுவதும் இதே நிலைதான் என்றார்.

    English summary
    China occupies hills near Pangong Tso lake. Locals are in fear to live there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X