டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதை மட்டும் விட்டுத்தர மாட்டோம்.. கல்வான் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா.. பொங்கி எழுந்த இந்தியா!

Google Oneindia Tamil News

டெல்லி: கல்வான் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடுவது தவறு, சீனா மிகவும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை பேசுகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    China- உடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி

    இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் தொடர்ந்து பிரச்னை அதிகரித்து வருகிறது. அங்கு இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் உள்ள 14வது கட்டுப்பாட்டு பகுதியில்தான் இந்த சண்டை வந்தது. கல்வான் பகுதி என்பது சுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே இந்தியாவிற்கு கீழ் இருக்கும் மிகவும் அமைதியான பகுதியாகும்.

    கோ சீனா கோ.. குஜராத், டெல்லி, உ.பியில் சீனாவிற்கு எதிராக வெடித்த போராட்டம்.. கோபத்தில் மக்கள்! கோ சீனா கோ.. குஜராத், டெல்லி, உ.பியில் சீனாவிற்கு எதிராக வெடித்த போராட்டம்.. கோபத்தில் மக்கள்!

    சீனாவின் கோரிக்கை

    சீனாவின் கோரிக்கை

    இந்த இடத்திற்கு சீனா எப்போதும் கோரிக்கை வைத்ததே கிடையாது. இந்த நிலையில் கல்வான் பகுதி மொத்தமாக எங்களுக்கு வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது. கல்வான்பகுதியில் இருந்து மொத்தமாக இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும். அந்த நிலப்பரப்பு எங்களுக்கு வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்து வருகிறது. கல்வானுக்கு திமிர் தனமாக சீனா உரிமை கொண்டாடுகிறது.

    சண்டை வந்தது

    சண்டை வந்தது

    இந்த பகுதியில் இருக்கும் சீனாவின் முகாம்களை நீக்க சென்ற போதுதான் சண்டை வந்தது. சீனாவின் ராணுவம் மட்டுமின்றி சீனாவின் வெளியுறவுத்துறையும் இந்த பகுதிக்கு உரிமை கோரி உள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், எங்கள் எல்லைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியா எந்த விதமான தப்பு கணக்கும் போட கூடாது. கல்வான் பகுதி எங்களுக்கு சொந்தமானது. இந்தியா எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்று நேற்று கூறியுள்ளது.

    என்ன பதிலடி

    என்ன பதிலடி

    இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை தற்போது இதற்கு அதிரடி பதிலடி கொடுத்து இருக்கிறது. அதில் கல்வான் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடுவது தவறு, சீனா மிகவும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை பேசுகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எல்லை பிரச்னையை அமைதியாக தீர்ப்பதே எங்கள் நோக்கம். இது தொடர்பான ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 6ம் தேதியே நடந்தது.

    எப்போது நடந்தது

    எப்போது நடந்தது

    ஜூன் 6ம் தேதி நடந்த ஆலோசனையில் இரண்டு நாடுகளும் படைகளை எல்லையில் இருந்து வாபஸ் வாங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதை சீனாவின் ராணுவமும் , வெளியுறவுத்துறையும் மதித்து நடக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக நேற்று மாலை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் உடன் பேசினார்.

    பேசியது என்ன

    பேசியது என்ன

    அவர் தனது பேச்சில், சீனா திட்டமிட்டு இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது. இந்தியாவிற்கு எதிராக வேண்டும் என்றே சீனா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை மீறி சீனா இப்படி செய்துள்ளது என்று கூறினார். இதனால் இரண்டு நாட்டு உறவில் இனி பெரிய அளவில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

    English summary
    China standoff with India: Beijing claim for galwan is not good says MEA Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X