டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பி செல்லுங்கள்.. மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.. சீனாவிற்கு இந்தியா கடுமையான வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் சீனாவின் தொடர் செயல்கள் அமைதிக்கு கேடு விளைவிக்கும், அதோடு மிக மோசமான பின்விளைவுகள் இதனால் ஏற்படும் என்று இந்திய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    India China Border பிரச்சினை..China-வுக்கு India கடுமையான Warning

    இந்தியா சீனா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் பேச்சுவார்த்தைகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து எல்லையில் சீனா - இந்தியா படைகளை குவித்து வருகிறது.

    இரண்டு நாட்டு தரப்பும் 20க்கும் மேற்பட்ட முறைகள் பேச்சுவார்த்தை செய்துள்ளது. இந்த நிலையில் சீனா தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

     சீனாவின் மாஸ்டர்பிளான்.. உலக நாடுகளை இணைக்கும் சீனாவின் மாஸ்டர்பிளான்.. உலக நாடுகளை இணைக்கும் "தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்''.. முழு பின்னணி!

    என்ன கருத்து

    என்ன கருத்து

    இரண்டு நாட்டு பிரச்சனை குறித்து சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய எல்லையில் இத்தனை நாள் இருந்து வந்த நிலையை மாற்ற சீனா நினைக்கிறது. அங்கு படைகளை குவித்து இயல்பு நிலையை குழைக்க பார்க்கிறது. சீனாவின் இந்த செயல் அமைதிக்கு கேடு விளைவிக்கும். அதோடு மிக மோசமான பின்விளைவுகள் இதனால் ஏற்படும்.

    சீனாவின் அத்துமீறல்

    சீனாவின் அத்துமீறல்

    லடாக் எல்லையில் சீனா உடனே அத்துமீறலை நிறுத்த வேண்டும். அங்கு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும். அங்கு சீனா படைகளை குவித்து வருவதை நிறுத்த வேண்டும். இதுதான் இந்த சண்டையை முடிவிற்கு கொண்டு வர ஒரே வழி என்பதை சீனா உணர வேண்டும். எல்லையில் சீனா படைகளை குவித்து, அதன் மீதான நம்பிக்கையை போக செய்துள்ளது.

    நம்பிக்கை இல்லை

    நம்பிக்கை இல்லை

    இரண்டு நாட்டு உறவில் இருந்த நம்பிக்கை தற்போது இல்லை. சீனா மிக கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த உறவு எப்படி செல்ல வேண்டும் என்பது சீனாவின் கையில் உள்ளது. எல்லை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு ஒன்றுதான். சீனா அங்கு அத்துமீறலை நிறுத்த வேண்டும். கல்வான் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடுவது தவறு. வரலாற்று ரீதியான சீனா தவறாக முடிவு எடுத்துள்ளது.

    திரும்பி செல்லுங்கள்

    திரும்பி செல்லுங்கள்

    இதுவரை பிரச்சனையே ஏற்படாமல் இருந்த கல்வான் பகுதியில் திடீரென சீனா அத்துமீறுவது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த பகுதியில் இந்திய வீரர்கள் பல வருடங்களாக எந்த விதமான பிரச்சனையும் இன்றி பாதுகாப்பு பணிகளை செய்து வந்தனர். சீனா இந்தியாவில் ஆக்கிரமித்துள்ள இடங்களை விட்டு உடனே வெளியேற வேண்டும். உடனே சீனா திரும்பி செல்ல வேண்டும்.

    கடும் தொந்தரவு

    கடும் தொந்தரவு

    கல்வானில் படைகளை குவித்து இந்தியாவிற்கு தொந்தரவு செய்வது சீனாவிற்கு எந்த வகையிலும் பலன் அளிக்காது.இதனால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும். அதை பார்க்க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அதில் எந்த விதமான விருப்பமும் இல்லை. இந்த பிரச்னையை நாங்கள் அணுகும் விதத்தில் சீனாவும் அணுகும் என்று நம்புகிறோம். கல்வான் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானதும் என்பதை சீனா உணர வேண்டும், என்று விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    China standoff with India: Delhi strongly warns Beijing on border issue in Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X