Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    59 Chinese appsக்கு தடை..மத்திய அரசு அதிரடி

    இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இன்னொரு பக்கம் இணையத்தில் சீனாவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சனை செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியர்கள் மூலம் டிவிட்டரில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

    செயலிகள் நீக்கம்

    செயலிகள் நீக்கம்

    அதேபோல் சீனாவின் ஆண்ட்ராய்டு செயலிகளை, ஆன்லைன் சாதனங்களை நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சீன செயலிகளுக்கு எதிராக தீவிரமாக இந்த பிரச்சாரம் நடந்தது. இந்த நிலையில் டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    அதிரடி தடை

    அதிரடி தடை

    இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் கட்டமைப்பு ஆகிவற்றுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மத்திய அரசின் 69A சட்டம் ( Information Technology Act ) மூலமா இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி இந்த செயலிகள் மீது தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    இந்திய மார்க்கெட்

    இந்திய மார்க்கெட்

    சீனாவின் செயலிகள் இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் இருக்கிறது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகை இதற்கு காரணம் ஆகும். இதன் மூலம் சீனாவிற்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்தது. இந்த நிலையில் சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு துறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    என்ன தளங்கள்

    என்ன தளங்கள்

    ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என்ற இரண்டு தளங்களில் இருந்தும் இந்த செயலிகள் நீக்கப்படுகிறது. மொபைல் மற்றும் மொபைல் அல்லாத டேப்லெட் போன்ற இணையம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களில் இருந்தும் இந்த செயலிகளும் தடை விதிக்கப்படுகிறது.டேட்டா திருட்டு தொடங்கி பல்வேறு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    என்ன செயலிகள்

    என்ன செயலிகள்

    டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட பின்வரும் 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.


    1. டிக்டாக் - TikTok
    2. ஷேர் இட்- Shareit
    3. க்வாய் - Kwai
    4. யுசி பிரவுசர் - UC Browser
    5. பைடு மேப் - Baidu map
    6. ஸெய்ன் - Shein
    7. கிளாஸ் அப் கிங்ஸ் - Clash of Kings
    8. டியு பேட்டரி சேவர் - DU battery saver
    9. ஹெலோ - Helo
    10. லைக் - Likee
    11. யுகேம் மேக் அப் - YouCam makeup
    12. எம்ஐ கம்யூனிட்டி - Mi Community
    13. சிஎம் பிரவுசர் - CM Browers
    14. வைரஸ் கிளீனர் - Virus Cleaner
    15. ஏபியுஎஸ் பிரவுசர் - APUS Browser
    16. ரோம்வி - ROMWE
    17. கிளப் பேக்டரி - Club Factory
    18. நியூஸ்டாக்- Newsdog
    19. பிய்ட்டி பிளஸ் - Beutry Plus
    20. வீ சாட்ட - WeChat
    21. யுசி நியூஸ் - UC News
    22. க்யூக்யூ மெயில் - QQ Mail
    23. வைபோ - Weibo
    24. செண்டர் - Xender
    25. கியூகியூ மியூசிக் QQ Music
    26. கியூகியூ -நியூஸ்பீட் QQ Newsfeed
    27. பிகோ லைவ் - Bigo Live
    28. செல்பி சிட்டி SelfieCity
    29. மெயில் மாஸ்டர் - Mail Master
    30. பாரலல் ஸ்பேஸ் Parallel Space 31.
    31. எம்ஐ வீடியோ கால் - ஜியோமி Mi Video Call - Xiaomi
    32. வீ சிங்க் - WeSync
    33. இஎஸ் பைல் டிரான்ஸ்பர் ES File Explorer
    34. விவா விடீயோ - Viva Video - QU Video Inc
    35. மேய்டு - Meitu
    36. வீகொ வீடியோ - Vigo Video
    37. நியூ வீடியோ ஸ்டேட்டஸ் - New Video Status
    38. டியு ரெக்கார்டர் DU Recorder
    39. வால்ட் ஹைட் - Vault- Hide
    40. கேச்சி கிளீனர் - Cache Cleaner DU App studio
    41. டியு கிளீனர் - DU Cleaner
    42. டியு பிரவுசர் - DU Browser
    43. Hago Play With New Friends
    44. கேம் ஸ்கென்னர் - Cam Scanner
    45. கிளீன் மாஸ்டர் - Clean Master - Cheetah Mobile
    46. வொண்டர் கேமரா - Wonder Camera
    47. போட்டோ வொண்டர் - Photo Wonder
    48. கியூகியூ பிளேயர் QQ Player
    49. வீ மீட் - We Meet
    50. சுவீட் செல்பி - Sweet Selfie
    51. பெய்டு டிரான்ஸ்லேட் - Baidu Translate
    52. வீ மேட் Vmate
    53. கியூகியூ இன்டர்நேஷனல் QQ International
    54. கியூகியூ செக்யூரிட்டி சென்டர் QQ Security Center
    55. கியூகியூ லாஞ்சர் QQ Launcher
    56. யு விடீயோ U Video
    57. V fly Status Video
    58. மொபைல் லோஜன்ட் Mobile Legends
    59. டியு பிரைவசி DU Privacy

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+