டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாங்காங் டிசோ ஏரி.. 2வது பாலம் கட்டும் சீனா... இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்காணிப்பு

லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா 2-வது பாலம் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா 2வது பாலம் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாலத்தை கொண்டு சீனா தனது ராணுவ தளவாடங்களை எளிதில் கொண்டுவர முடியும். சீனா கட்டி வரும் புது பாலம் பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Pangong Tso பகுதியில் இரண்டாவது பாலம் கட்டும் China-வின் PLA #Defence

    இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

    China starts building another bridge across Pangong Lake Satellite Pic Shows

    இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளது. அதேவேளை எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இருநாடுகளும் இதுவரை 15 கட்ட ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால், அந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

    இதற்கிடையில், 1962 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியாவின் கிழக்கு லடாக்கின் பாங்காங் டிசோ ஏரி பகுதியில் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது. இந்த பகுதியை சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக இந்தியா கருதுகிறது.

    கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் பாங்காங் டிசோ ஏரி உள்பட இந்தியாவின் எல்லையோர பகுதியில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பாலம் ஒன்றை அமைத்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது. இந்த பாலம் மூலம் போர் தளவாடங்கள், வீரர்களை சீனா எளிதில் எல்லைப்பகுதிக்கு கொண்டு வர முடியும்.

    கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது - நன்றி சொன்ன மனைவி கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது - நன்றி சொன்ன மனைவி

    இந்த நிலையில், லடாக் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவம் இரண்டாவது பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியா சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளா் டாமியன் சைமன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், அசல் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் ராணுவ தளவாடங்களை எளிதாக எடுத்து செல்வதற்காக மிகப்பொிய பாலம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. இதனை செயற்கைக்கோள் புகைப்படம் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாலத்தின் இரண்டு புறமும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

    எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் இந்தியா தரப்பிலும் பாலங்கள், சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ராணுவ தளவாடங்களை விரைந்து கொண்டு செல்ல முடியும். இதே பகுதியில் சீனா ஏற்கனவே தனது முதல் பாலத்தை கட்டி முடித்து விட்டது.

    இதனிடையே இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான பாங்காங் டிசோ ஏரியில் சீனா 2வது பாலம் அமைப்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    English summary
    China is constructing second bridge in an area held by it around the strategically key Pangong Tso lake in eastern Ladakh according to satellite imagery and people familiar with the development on Wednesday. In this regard, the Indian Ministry of External Affairs has stated that it is actively monitoring China's construction of the 2nd bridge over the occupied Pangong Tsi Lake.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X