டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவின் போர் கப்பலிடம் ஜாக்கிரதை.. இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் வார்னிங்.. என்ன நடக்கிறது?

சீனாவின் போர் கப்பல்கள் விரைவில் இந்திய பெருங்கடலில் கடற்படை தளவாடங்களை உருவாக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவிற்கு அமெரிக்கா வார்னிங் | Be Aware! China Aircraft Carriers May Enter Indian Ocean

    டெல்லி: சீனாவின் போர் கப்பல்கள் விரைவில் இந்திய பெருங்கடலில் கடற்படை தளவாடங்களை உருவாக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் பெரிய போட்டி நிலவி வந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின் இந்த சண்டை முடிந்து, அமெரிக்கா ரஷ்யா இடையில் சண்டை உருவானது. கடந்த 5 ஆண்டுகள் வரை ரஷ்யா அமெரிக்கா இடையில்தான் பிரச்சனை இருந்தது.

    ஆனால் சீனாவின் வேகமான வளர்ச்சி, உலகில் நம்பர் ஒன் நாடாக சீனாவை மாற்றியது. தற்போது உலக அளவில் பொருளாதாரத்திலும், பாதுகாப்பிலும் சீனா, அமெரிக்கா இடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    காஷ்மீரில் 5 மே.வங்க கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை- தொடரும் தீவிரவாதிகள் வெறிச்செயல்காஷ்மீரில் 5 மே.வங்க கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை- தொடரும் தீவிரவாதிகள் வெறிச்செயல்

    வேகமாக செய்து வருகிறது

    வேகமாக செய்து வருகிறது

    உலகிலேயே சீனாவின் கடற்படைதான் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகில் யாரும் கட்டாத வேகத்தில் கடற்படை தளவாடங்களை உலகம் முழுக்க சீனா கட்டி வருகிறது. அதிலும் தன்னுடைய கடற்பகுதியில் மட்டுமின்றி, பிற நாட்டின் கடற்பகுதியில் சீனா மிக வேகமாக கடற்படை தளவாடங்களை அமைத்து வருகிறது.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த நிலையில்தான் அமெரிக்காவின் மூத்த கடற்படை கமாண்டரும், அமெரிக்கா பசிபிக் கடற்படை பிரிவின் கமாண்டருமான ஜான் அக்குயில்னோ இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இந்திய பெருங்கடல் பகுதியையும் இவர்தான் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சீனாவின் அத்துமீறல் குறித்து ஜான் அக்குயில்னோ தற்போது இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    ஜான் அக்குயில்னோ தனது பேட்டியில், சீனா, ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற சிறிய நாடுகளை சீனா மிக மோசமாக அச்சுறுத்தி வருகிறது. அவர்களின் கடல் பகுதியில் ஏற்கனவே தன்னுடைய கடற்படை தளவாடங்களை சீனா அமைந்துவிட்டது. இது உலக எல்லை விதிக்கு எதிரானது.

    மிக மோசமாக செயல்படுகிறது

    மிக மோசமாக செயல்படுகிறது

    அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் நாடுகளையும் சீனா மிக மோசமாக எல்லைமீறி அச்சுறுத்தி வருகிறது. இதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது. ஆப்பிரிக்காவிலும் கூட அணு ஆயுதங்கள் தாங்கிய கடற்படை தளவாடங்களை சீனா அமைத்து இருக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராக இப்படி செய்துள்ளதாக சீனா கூறியுள்ளது. ஆனால் அது உண்மை கிடையாது.

    இரண்டு நாடுகள்

    இரண்டு நாடுகள்

    சீனாவின் இந்த வேகமாக வளர்ச்சிக்கு பாகிஸ்தானும் உதவி வருகிறது. பாகிஸ்தானின் கடல் பகுதியில் விரைவில் சீனா கண்டிப்பாக கடற்படை தளவாடத்தை அமைக்கும். இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. அதேபோல் விரைவில் இந்திய பெருங்கடலில் சீனாவின் கடற்படை தளவாடம் அமைக்கப்படலாம். இந்தியாவின் கடல் பகுதியில் சீனா விரைவில் அத்துமீறும்.

    கண்டிப்பாக நடக்கும்

    கண்டிப்பாக நடக்கும்

    சீனாவின் செயல் மூலம் இது உறுதியாகி உள்ளது. இன்னும் 5 வருடங்களில் சீனா இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்படை தளவாடங்களை அமைக்க போகிறது. இந்தியா சீனாவிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும், என்று கமாண்டர் ஜான் அக்குயில்னோ கூறியுள்ளார். இவர்தான் உலகிலேயே மிகப்பெரிய கடற்படைக்கு கமாண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chinese Aircraft Carriers will enter the Indian ocean soon warns the USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X