எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பறந்த சீன போர் விமானம்..திடீர் பதற்றம்.. பதிலடிக்கு தயாராகும் ரஃபேல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்கு அருகே சீனாவின் போர் விமானங்கள் சில தினங்களுக்கு முன்னர் பறந்து சென்றது. இது முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாகும். அதேபோல இன்றும் இது போன்ற நடவடிக்கையில் சீன விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இரு நாட்டுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 24-25 ஆகிய தேதிகளில் கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சீனாவின் ஜே-11 ரக போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளது. இது போன்ற நடவடிக்கையில் இந்தியா-சீனா என இரு நாடுகளும் முன்னர் ஈடுபட்டது கிடையாது. ஆனால் தற்போது சீனாவின் இந்த நடவடிக்கை புதிய பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஜே-11

ஜே-11

1998களில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் இணைக்கப்பட்ட இந்த போர் விமானம் தற்போதுவரை பயன்பாட்டில் உள்ளது. மட்டுமல்லாது, இது 6 வகையான ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இவைத் தவிர கொத்து குண்டுகளை போடவும் இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சோவியத் ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தை தழுவி ஜே-11 உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல இது மிக்-19s ரக போர் விமானத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதற்கும் ஜே-11 பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

 அதிருப்தி

அதிருப்தி

எல்லை அருகே சீன விமானம் பறந்த சம்பவத்தையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் கடும் அதிருப்தி எழுந்தது. சுஷுல் மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் ஜூலை 17 அன்று நடைபெற்ற இந்தியா- கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் சீனாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது என இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் எந்தவித சூழலையும் எதிர்கொள்ளும் அளவு இந்திய விமானப்படை திறமையானதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 சர்ச்சை

சர்ச்சை

இந்த சர்ச்சை ஓயாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை சீன போர் விமானங்கள் இதுபோன்று எல்லைக்கு அருகில் பறந்து சென்றுள்ளன. இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்திய பகுதியில் ராணுவம் எந்த நிலையில் உள்ளது என்பதை சீனா சுலபமாக கணித்துவிடும். ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அந்நாட்டுக்கு உதவும் வகையில் கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுவது, டோக்லாம் பகுதியில் புதிய கிராமங்களை உருவாக்குவது என பல எல்லை பிரச்னையை சீனா சமீப நாட்களாக ஏற்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் இந்த போர் விமான சர்ச்சை மேலும் புதிய அச்சத்தை இரு நாடுகளுக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பதிலடி

பதிலடி

சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தால் இந்தியா அதற்கான தக்க பதிலடியை கொடுக்கும் என சௌத்ரி ஏற்கெனவே அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல இந்திய விமானப்படை தனது மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான மிக் -29 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்களை சர்ச்சைக்குரிய பகுதியில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து சற்று தொலைவில்தான் அம்பாலா ராணுவ விமான தளம் அமைந்துள்ளது. இங்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஜே-11 ரக விமானங்களை விட பல மடங்கு இவை சக்திவாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+