டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதிகளிடம் இருந்து சீனாவின் எம்.16 ரக துப்பாக்கிகள் பறிமுதல்.. ராணுவ அதிகாரிகள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளிடம் வழக்கமாக ஏகே ரக துப்பாக்கிகளே கைப்பற்றட்டு வரும் நிலையில் தற்போது சீனாவின் எம்.16 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தியாவுக்குள் நுழைந்து நாச வேலைகளில் ஈடுபடும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் அவ்வப்போது காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு வழியாக ஊடுருவ முயன்று வருகின்றனர்.

தீவிரவாதிகளின் இந்த சதித்திட்டத்தை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நமது பாதுகாப்பு படை வீரர்கள் திறம்பட முறியடித்து வருகின்றனர்.

மோசமாகும் காங்கிரஸ் நிலைமை.. குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேர் விலகல் மோசமாகும் காங்கிரஸ் நிலைமை.. குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேர் விலகல்

 பயங்கரவாத ஆயுதங்கள் பறிமுதல்

பயங்கரவாத ஆயுதங்கள் பறிமுதல்

குறிப்பாக 24 மணி நேரமும் எல்லையில் நிலவும் அசாதாரண தட்பவெப்ப நிலையையை சமாளித்து பாதுகாப்பு பணியில் நமது வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை உரி செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கரவாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 வழக்கத்திற்கு மாறானது

வழக்கத்திற்கு மாறானது

தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் எம் -16 ரக ரைபிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்படும் இத்தகைய எம் -16 ரக ரைபிள்கள் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்படுவது வழக்கத்திற்கு மாறானது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பரமுல்லா மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அஜய் சந்த்புரி கூறியதாவது:-

 யூகிக்கவும் முடியாது

யூகிக்கவும் முடியாது

எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளிடம் வழக்கமாக ஏகே ரக துப்பாக்கிகளே கைப்பற்றட்டு வருகிறது. சில நேரங்களில் எம்- 4 ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்படும். ஆனால், சீனாவில் தயாரிக்கப்படும் எம் -16 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்படுவது முற்றிலும் வழக்கத்திற்கு மாறானது. இருந்தாலும் பாகிஸ்தான் ராணுவம், திவிரவாதிகள், சீன ராணுவம் இடையே ஒரு தொடர்பு இருக்கலாம் என்பதை சூசகமாக காட்டுகிறதா? என்று உறுதியான முடிவுக்கு வரமுடியாது. பெரிய அளவில் யூகிக்கவும் முடியாது.

 கடினமான நிலப்பரப்புகள்

கடினமான நிலப்பரப்புகள்

ஏனெனில் இதில் சற்று விரிவான விசாரணை தேவைப்படுகிறது. எல்லைக்கு அப்பால் இந்தியாவுக்குள் ஊடுருவும் சதித்திட்டத்துடன் சுமார் 100-120 தீவிரவாதிகள் தயாராக உள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு பகுதி சுமார் 740 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில் சில இடங்கள் மிகவும் கடினமான நிலப்பரப்புகள் மற்றும் சீரற்ற தட்ப வெப்ப நிலையையும் உள்ளடக்கிய பகுதிகளாக உள்ளன. எனவே தீவிர கண்காணிப்புக்கு மத்தியிலும் சில இடைவெளிகள் ஏற்பட்டு விடுகின்றன. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுவுகின்றனர். இதனால், போர் போன்ற சூழல் ஏற்படுகிறது.

 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

இருந்த போதிலும் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதால் கண்காணிப்பு மேம்பட்டு வருகிறது. இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் கணிசமக குறைந்துள்ளது. இதனால், நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதி நிலவுகிறது. இதனால், விரக்தி அடைந்தவர்கள் எப்படியாவது தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய ஒரு ஊடுருவல் முயற்சியில் தான் 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

English summary
The seizure of M16 rifles from China has led to various speculations, while AK rifles are usually seized from terrorists trying to infiltrate the India-Pakistan border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X