"சங்கி".. அந்த "பாடகியம்மா" கத்திட்டே இருக்காங்க.. எடப்பாடி ஆட்சியில் வாயே திறக்கலயே.. திமுக சுளீர்
சென்னை: கவிஞர் வைரமுத்துவை சீண்டி, தமிழக பாஜக தலைவர் தந்துள்ள பேட்டியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு திமுக பதிலடி தந்து வருகிறது.. என்ன நடந்தது?
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோர் பாஜக எம்பி மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி, கடந்த பல வாரங்களாகவே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்..
போராட்டங்கள்: இந்த போராட்டத்தின்போது, பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.. விளையாட்டு வீரர்களின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தந்துள்ளன.. அதேபோல நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அத்துடன், டெல்லி போலீசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்... அதைவிட முக்கியமாக, "செங்கோல் வளைந்து விட்டது" என்றும் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
மேலிட பாஜகவுக்கு இந்த விவகாரம் பெரும் சங்கடமாக மாறி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், கவியரசர் வைரமுத்துவை சீண்டி தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
நக்கீரன்: "எல்லா குற்றத்துக்கும் ஒரு ஆதாரம் வேண்டும்.. குற்றத்தை முறைப்படி விசாரிக்க ஒரு புரொசிஜர் வேண்டும்.. புகார் சொன்ன மல்யுத்த வீராங்கனைகள் எந்த ஆதாரங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை... ஆனால், புகார் அளித்தவுடன் எப்ஐஆர் போட்டாச்சு.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், உடனே கைது செய்ய செய்தால்தான், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்று சொல்வது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது..
புகார்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் செங்கோல் வளைந்து விட்டது என்று சொல்கிறார்.. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நபராக திகழும் கவிப்பேரரசு வைரமுத்து மீதே, மொத்தம் 19 பாலியல் கம்ப்ளைண்ட்கள் இருக்கின்றன.. அவருக்கு லெப்ட்டில், ரைட்டில் நின்று கொண்டிருப்பது யார்? கவிதையெல்லாம் பயங்கரமா எழுதுறாரே.. யார் கூட அவர் நிற்கிறார்? முதல்வர் முக ஸ்டாலின்கூட நிற்கிறார்.
அந்த பாடகியம்மா எத்தனை வருஷமா கத்திட்டு இருக்காங்க.. அதுவும் பாலியல் விவகாரத்தில்.. இதுவரைக்கும் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையே.. அட்லீஸ்ட் அவர் மீது எப்ஐஆராவது பதிவு செய்தாங்களா? போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டு விசாரணையாவது செய்தாங்களா? நான் வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. ஏன் என்றால், குற்றத்துக்காக யாரையும் கைது செய்ய முடியாது.. அதுபோல வீரர்கள் விஷயத்திலும், போலீஸ் விசாரித்து ரிப்போர்ட் தரணும்" என்று கூறியிருந்தார்.
சின்மயி விவகாரத்தை சுட்டிக்காட்டி இவ்வாறு பேசியதுமே, திமுகவின் ராஜீவ் காந்தியும் கிளப்பி உள்ளார்.. இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

சின்மயி: அதில், "சின்மயி மீது உள்ள அக்கறையோ பெண்கள் உரிமைக்காவோ பாஜக இப்போது சின்மயிக்கு ஆரதவாக பேசவில்லை... பாஜக கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி ஆட்சியில் சின்மயி புகார் கூறியபோது ஏன் சின்மயிக்கு ஆதரவாக அப்போது வாய் திறக்கவில்லை இந்த பாஜக சங்கிகள்.. இது டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தினை மடைமாற்றும் யுத்தி" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு பாஜகவினர் திரண்டு வந்து பதிலளித்து கொண்டிருக்கிறார்கள். "ஆதாரம் இருந்தால் தமிழ்நாட்டில் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து கைது செய்ய வேண்டியது தானே? சும்மா அரசியலுக்காக வெத்து வெட்டு போராட்டம்... அந்த கதையெல்லாம் இருக்கட்டும். இப்ப வைரமுத்து மேல நடவடிக்கை எடுப்பீங்களா மாட்டிங்களா? மல்யுத்த வீராங்கனைகளுக்கு முன்பே இங்கு பிரச்சினை வெளியில் வந்து விட்டது என்று பதிவிட்டு வருகிறார்கள்.
ஆதரவு: மேலும் சிலர், "வீராங்கணைகள் அரசியலுக்காக பேசுறாங்கனே வெச்சுப்போம். வைரமுத்து மேல 19 பெண்கள் பாலியல் புகார் கொடுத்திருக்காங்களா இல்லையா? பெண் பாதுகாப்பு, உரிமை பற்றி திமுக பேசுகிறதே.. இதுவரை வைரமுத்து மேல என்ன நடவடிக்கை எடுத்தது? வைரமுத்துவுக்கு தொடர்ந்து பொதுவெளியில் முதல்வர் முக ஸ்டாலின் ஆதரவு அளிப்பது ஏன்?" என்றெல்லாம் ட்விட்டரில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதற்கு திமுகவினரும் திரண்டு சென்று பதிலளித்து வருகிறார்கள்.
இதனிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் 3 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்..
10 புகார்கள்: இதுவரை அவர்மீது மொத்தம் 10 புகார்கள் தரப்பட்டுள்ளதாம்.. அந்த 10 புகார்களுமே, மல்யுத்த வீராங்கனைகள் தந்த பாலியல் புகார்கள்தானாம். இதில் கொடுமை என்னவென்றால், இந்த புகார் அளித்தவர்களில் ஒருவர் 18 வயதுக்கு குறைந்த மைனராம்.. அந்த மைனர் பெண் சார்பாக அவரது அப்பாதான் புகார் தந்துள்ளார்..
உள் மற்றும் வெளிநாடுகளின் நடந்த போட்டிகளின்போதெல்லாம் வீராங்கனைகளை தனியாக அழைத்து மிகவும் மோசமான செயலில் பிரிஜ் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. வீராங்கனைகளிடம் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி, பக்கத்தில் அழைப்பாராம்.. பிறகு, அவர்களது மார்பகங்கள், தோள்பட்டை என உடலின் பல இடங்களில் தொட்டு பேசுவார் என்றும், இதில் தங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்று சொன்னபிறகும்கூட, இப்படியான செயலில் அவர் இறங்கிவிடுவார் என்று எப்ஐஆர் புகாரில் பதிவாகி உள்ளது.
மார்பகம்: "இப்படித்தான் ஒருநாள் ஹோட்டலின் சாப்பாட்டு ரூமுக்கு அழைத்த பிரிஜ் சிங், என்னுடைய மார்பகத்திலும், வயிற்றிலும் கைவைத்து தடவி பார்த்தார்... இதுபோன்று 3-4 முறை மீண்டும் மீண்டும் செய்தார்.. எனக்கு உடனே நடுக்கம் வந்துவிட்டது" என்று இன்னொரு எஃப்ஐஆரில் வீராங்கனை ஒருவர் தெரிவித்துள்ளர். இப்படி ஒவ்வொரு புகாரும் பகீரை கிளப்பி கொண்டிருக்கும் நிலையில், அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் சலசலப்பையும், பரபரப்பையும் கிண்டி விட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications