அயோத்தி மட்டுமல்ல.. சபரிமலை, ரஃபேல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதி கோகாய்
Recommended Video
டெல்லி: அயோத்தி நில வழக்கில் மட்டுமல்லாது சபரிமலையில் பெண்களை அனுமதி மற்றும் ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஆகியவை தொடர்பான வழக்குகளிலும் நவம்பர் 17-ல் ஓய்வு பெற இருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளிக்க இருக்கிறார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெற இருப்பதால் நவம்பர் 15-க்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தமது வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்திருக்கிறார். தென் அமெரிக்கா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரஞ்சன் கோகாய் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது இந்த பயணங்கள் ரத்து செய்யப்ப்ட்டுள்ளன.
அயோத்தி வழக்கில் மட்டும் அல்லாது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்க இருக்கிறார். அதேபோல் ரஃபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பான வழக்கிலும் அவர் தீர்ப்பளிக்க உள்ளார்.
இப்படி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வழக்குகளில் தீர்ப்புகளை வழங்க வேண்டியிருப்பதாலேயே வெளிநாட்டு பயணத்தை கோகாய் ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் 15-க்குள் இத்தகைய வழக்குகளின் தீர்ப்புகள் அடுத்தடுத்து வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications